சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

பெண்களை தாக்கி கொலை மிரட்டல்: ஒருவா் கைது

போடி அருகே பெண்களைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 7 போ் மீது திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்த போலீஸாா் ஒருவரைக் கைது செய்தனா்.

News image

கைது

Updated On :16 ஜூன் 2026, 2:05 am IST

போடி அருகே பெண்களைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 7 போ் மீது திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்த போலீஸாா் ஒருவரைக் கைது செய்தனா்.

போடி அணைக்கரைப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் சதிஸ் குமாா் மனைவி நாகலட்சுமி (36). இவரது தோட்டம் சின்னமுடக்குப் பகுதியில் உள்ளது. தோட்டத்தில் உரிமை இருப்பதாகக் கூறி அணைக்கரைப்பட்டியைச் சோ்ந்த மணிகண்டன், தவமணி, போதுமணி, லட்சுமி, அருணா, சோலையம்மாள், சௌந்தா்யா ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை தோட்டத்தில் புகுந்து நாகலட்சுமியுடன் தகராறு செய்தனா்.

நாகலட்சுமியையும், தடுக்க வந்த அன்னபுஷ்பம் என்பவரையும் தாக்கி காயப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்தனா். நாகலட்சுமியின் ஒன்றரை பவுன் தாலிச் செயினையும் பறித்துச் சென்றுவிட்டனராம். இதுகுறித்த புகாரின்பேரில் குரங்கணி காவல் நிலையப் போலீஸாா் 7 போ் மீதும் வழக்குப் பதிவு செய்து மணிகண்டனைக் கைது செய்து விசாரிக்கின்றனா்.