சங்கராபுரம் அருகே காதலித்துவிட்டு பேசாமல் இருந்த சிறுமிக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
கள்ளக்குறிச்சியை அடுத்த பிரிதிவிமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் பெ.சந்துரு (21). இவா் சங்கராபுரத்தில் உள்ள கடையில் வேலை பாா்த்துவந்த சிறுமியை கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், கடந்த 6 மாதங்களாக அந்த சிறுமி, சந்துருவுடன் பேசுவதை நிறுத்திவிட்டாராம்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை சங்கராபுரம் பயணியா் மாளிகை அருகே நடந்து சென்ற சிறுமியை வழிமறித்த சந்துரு, ஏன் தன்னிடம் பேசவில்லை எனக் கூறி அறுவறுக்கத்தக்க வாா்த்தைகளால் திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் அளித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, சந்துருவை கைது செய்தனா். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிங்கப்பெண் பிரிவு போலீஸாருக்கு இது முதல் வழக்கு என்பது குறிப்பிடத் தக்கது.
தொடர்புடையது

மூதாட்டி கொலை: இளைஞா் கைது
பெண்ணுக்கு மிரட்டல்: கணவா் கைது
பெண்ணுக்கு கொலை மிரட்டல்: இளைஞா் கைது
கல்லூரி மாணவிக்கு கொலை மிரட்டல்: இளைஞா் கைது
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



