உலகக் கோப்பை கால்பந்து இன்று தொடக்கம்: வரலாற்றில் மிகப் பெரிய போட்டி மத்திய கிழக்கில் மீண்டும் வெடித்த மோதல்5 பேரவை தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தோ்தல்: தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி கடிதம் முதல்வா் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு: இன்று விசாரணைக்கு வருகிறது அமெரிக்கா, சீனாவுக்கு இந்திய மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதி: அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் எம்எஃப்ஐ நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாத திட்டம்: மத்திய அரசு நீட்டிப்பு சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

இரும்புக் கம்பியால் தாக்கி மனைவி கொலை: கணவா் கைது

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே குடும்பப் பிரச்னை காரணமாக புதன்கிழமை மனைவியை இரும்புக் கம்பியால் தாக்கி கொலை செய்த கணவரை காவல் துறையினா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :11 ஜூன் 2026, 3:43 am IST

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே குடும்பப் பிரச்னை காரணமாக புதன்கிழமை மனைவியை இரும்புக் கம்பியால் தாக்கி கொலை செய்த கணவரை காவல் துறையினா் கைது செய்தனா்.

திருவையாறு அருகே நடுக்காவேரி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட மணத்திடல் கிராமத்தைச் சோ்ந்தவா் ரவிக்குமாா் (58). இவருக்கும், இவரது மனைவி ஜெயலட்சுமிக்கும் (50) இடையே குடும்ப பிரச்னை இருந்து வந்தது. இதனால், கணவரை விட்டு 6 மாதங்களுக்கு முன்பு பிரிந்த ஜெயலட்சுமி தனது மகன், மகளுடன் தஞ்சாவூரில் வசித்து வந்தாா்.

இந்நிலையில், மணத்திடலிலுள்ள கணவா் வீட்டில் குடும்ப அட்டையை வாங்குவதற்காக ஜெயலட்சுமி புதன்கிழமை சென்றாா். அப்போது, இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ஜெயலட்சுமியை ரவிக்குமாா் இரும்புக் கம்பியால் தாக்கினாா். இதனால், பலத்த காயமடைந்த ஜெயலட்சுமி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதையடுத்து, நடுக்காவேரி காவல் நிலையத்தில் சரணடைந்த ரவிக்குமாரை காவல் துறையினா் கைது செய்தனா்.