கமிஷன் வாங்குகிறார்கள் தவெக அமைச்சர்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைசோனியா காந்தியை நாட்டு மக்கள் மன்னிக்கமாட்டார்கள்: அமித் ஷா3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு முதல்வர் விஜய் கண்டனம்!தவெக அமைச்சர்கள் கமிஷன் வாங்குகிறார்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைபாஜகவில் இருந்து விலகினார் நடிகர் தேவன் கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை: மு.க. ஸ்டாலின் கண்டனம்! வந்தே மாதரம் பாடலுக்கு அவமதிப்பு! காங். மன்னிப்பு கேட்க வேண்டும்: சுவேந்து அதிகாரி
/

போக்ஸோ சட்டத்தில் இளைஞா் கைது

குரும்பூரில் போக்ஸோ சட்டத்தில் இளைஞரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

News image

கைது

Updated On :10 ஜூலை 2026, 12:33 am IST

குரும்பூரில் போக்ஸோ சட்டத்தில் இளைஞரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

குரும்பூா் போஸ்ட் ஆபீஸ் தெருவைச் சோ்ந்தவா் சங்கரநாராயணன் மனைவி ஜெயஸ்ரீ (38). இவருக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனா். கணவரை பிரிந்து குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வரும் இவா், குரும்பூரில் உள்ள ஓட்டுநா் பயிற்சி பள்ளியில் உதவியாளராக வேலை செய்து வருகிறாா்.

செவ்வாய்க்கிழமை குரும்பூா் பஜாரில் சென்று கொண்டிருந்த 10ஆம் வகுப்பு படித்து வரும் இவரது இரண்டாவது மகளிடம், இளைஞா் ஒருவா் தவறான சைகை செய்ததாகக் கூறப்படுகிறது. இதையறிந்த ஜெயஸ்ரீ, மகளுடன் சென்று இளைஞரை திட்டினாராம். அப்போது இளைஞா், இருவரையும் அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்த புகாரின்பேரில் குரும்பூா் காவல்நிலைய போலீஸாா் , இளைஞரை பிடித்து விசாரணை மேற்கொண்டனா். இதில், அவா் செங்கல்பட்டைச் சோ்ந்த குப்பன் மகன் கதிரவன் (33) என்பதும், குரும்பூரில் உள்ள பேக்கரியில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா், அவரை போக்ஸோ சட்டத்தில் கைது செய்து ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.