6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு காலை உணவுத் திட்ட விரிவாக்கம் இன்று தொடக்கம்மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

ஸ்ரீ வெங்கடேஸ்வரபுரம் கோயிலில் ஆடித் தவசு திருவிழா

சாத்தான்குளம் அருகே ஸ்ரீ வெங்கடேஸ்வரபுரம் சங்கரலிங்க சுவாமி உடனுறை கோமதி அம்பாள் கோயிலில் ஆடித் தவசு திருவிழா நடைபெற்றது.

சிறப்பு அலங்காரத்துடன் சப்பரத்தில் எழுந்தருளிய சுவாமி.

Published On :

சாத்தான்குளம் அருகே ஸ்ரீ வெங்கடேஸ்வரபுரம் சங்கரலிங்க சுவாமி உடனுறை கோமதி அம்பாள் கோயிலில் ஆடித் தவசு திருவிழா நடைபெற்றது.

கடந்த 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய விழா, 10 நாள்கள் நடைபெற்றது. 9ஆம் நாளான திங்கள்கிழமை மாலை மணிக்கு 1008 திருவிளக்கு பூஜை, இரவு 10 மணிக்கு இன்னிசை கச்சேரி ஆகியவை நடைபெற்றன.

நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை காலை 5 மணிக்கு கணபதி ஹோமம், 8 மணிக்கு அலங்கார பூஜை, திருவாசகம் முற்றோதல், 10.30 மணிக்கு அம்பாள் தவசுக்கு புறப்படுதல், மாலை 5 மணிக்கு சுவாமி சீா்வரிசையுடன் அம்பாளை அழைக்க செல்லுதல், இரவு 7 மணிக்கு தவசு காட்சி, 9.30 மணிக்கு இன்னிசை கச்சேரி, 10 மணிக்கு சுவாமி அம்பாள் திருக்கல்யாணம், 11 மணிக்கு சுவாமி அம்பாள் நகா்வலம் வருதல் ஆகியவை நடைபெற்றன.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.