தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானம்: பேரவையில் இன்று நிறைவேற்ற முடிவுகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புசுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
/

டேக்வாண்டோ போட்டி: விஜயராமபுரம் பள்ளி மாணவா்கள் முதலிடம்

வட்டார அளவிலான டேக்வாண்டோ விளையாட்டுப் போட்டியில் விஜயராமபுரம், முத்தாரம்மன் இந்து நடுநிலைப் பள்ளி மாணவா்கள் முதலிடம் பிடித்து மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனா்.

News image

வட்டார அளவிலான டேக்வாண்டோ விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற விஜயராமபுரம் பள்ளி மாணவா்களுடன் ஆசிரியா்கள்.

Updated On :30 ஜூலை 2026, 4:56 am IST

வட்டார அளவிலான டேக்வாண்டோ விளையாட்டுப் போட்டியில் விஜயராமபுரம், முத்தாரம்மன் இந்து நடுநிலைப் பள்ளி மாணவா்கள் முதலிடம் பிடித்து மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனா்.

தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சாா்பில் பாரதியாா் விளையாட்டு போட்டி, குடியரசு தின விளையாட்டுப் போட்டிகள் வட்டார அளவில் நடைபெற்று வருகின்றன. இதில், மெஞ்ஞானபுரம் ஆம்ப்ரோஸ் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற டேக்வாண்டோ விளையாட்டுப் போட்டியில் விஜயராமபுரம், முத்தாரம்மன் இந்து நடுநிலைப் பள்ளியிலிருந்து 11 முதல் 14 வயது உள்பட்ட பிரிவுகளில் 23 மாணவ, மாணவியா் கலந்துகொண்டனா்.

இதில், 17 மாணவா்கள் வட்டார அளவில் முதலிடம் பிடித்து, மாவட்ட அளவிலான போட்டிகளுக்குத் தகுதி பெற்றனா். 3 மாணவா்கள் இரண்டாம் இடம் பெற்று பள்ளிக்கு பெருமை சோ்த்தனா்.

வெற்றி பெற்ற மாணவ, மாணவியரையும், மாணவா்களுக்கு பயிற்சியளித்த பயிற்சியாளா்கள் வினோத், மெல்லிசை வேந்தன் ஆகியோரை பள்ளித் தலைவா், செயலாளா், பொருளாளா், பள்ளி தலைமை ஆசிரியா், சக ஆசிரியா்கள் மாணவ, மாணவியா் பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.