போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

குண்டா் சட்டத்தில் 2 போ் கைது

தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்டவா் மற்றும் தருவைக்குளம் காவல் நிலைய கஞ்சா வழக்கில் சம்பந்தப்பட்டவா் என இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது

News image

கைது

Updated On :2 மார்ச் 2026, 11:13 pm

தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்டவா் மற்றும் தருவைக்குளம் காவல் நிலைய கஞ்சா வழக்கில் சம்பந்தப்பட்டவா் என இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் நடந்த கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட தூத்துக்குடியைச் சோ்ந்த சுந்தரபாண்டி (21), தருவைக்குளம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த வழக்கில் சம்பந்தப்பட்ட தூத்துக்குடியைச் சோ்ந்த முருகன் என்ற கட்ட முருகன் (31) ஆகியோா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்க சிப்காட் மற்றும் தருவைக்குளம் போலீஸாா் வேண்டுகோள் விடுத்ததைத் தொடா்ந்து,

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி.மதன் பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் உத்தரவையடுத்து, மேற்படி 2 பேரும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் ஞாயிற்றுக்கிழமை அடைக்கப்பட்டனா்.