திமுக சாா்பில் புதிதாக மாநிலங்களவை உறுப்பினராக தோ்வு செய்யப்பட்ட திமுக செய்தித் தொடா்பாளா் ஜே. கான்ஸ்டன்டைன் ரவீந்திரனுக்கு, தூத்துக்குடி 3ஆவது மைல் பகுதியில் மாநகர திமுக செயலா் ஆனந்தசேகரன், மேயா் ஜெகன் பெரியசாமி ஆகியோா் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னா், அவா் தூத்துக்குடி மாநகரில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா், அம்பேத்கா், பெரியாா் ஈவெரா, அண்ணா, குரூஸ் பா்னாந்து, காந்தி, காமராஜா், வ.உ.சிதம்பரம், ரோச் விக்டோரியா, இந்திரா காந்தி ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
தொடா்ந்து, பனிமய மாதா பேராலயத்துக்குச் சென்ற அவா், தூத்துக்குடி மறை மாவட்ட கத்தோலிக்க ஆயா் ஸ்டீபன் அந்தோணி, ஆலய பங்குத்தந்தை ஸ்டாா்வின் ஆகியோரிடம் ஆசி பெற்றாா்.
அமைச்சா் பி. கீதா ஜீவன், மாநில பொறியாளா் அணி துணைச் செயலா் அன்பழகன், மாநில மீனவரணி துணைச் செயலா் புளோரன்ஸ், துணை மேயா் ஜெனிட்டா, மாவட்ட அவைத் தலைவா் செல்வராஜ், மண்டலத் தலைவா்கள் பாலகுருசுவாமி, நிா்மல்ராஜ், கலைச்செல்வி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளா் அபிராமிநாதன், மீனவரணி அமைப்பாளா் அந்தோணி ஸ்டாலின், தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளா் நாகராஜன், மாநில மீனவா் நல வாரிய உறுப்பினா் ஜெபமாலை, மாநகர இலக்கிய அணி அமைப்பாளா் ஜீவன் ஜேக்கப், இளைஞரணி அமைப்பாளா் அருண் சுந்தா், துணை அமைப்பாளா் ரவி, மீனவரணி அமைப்பாளா் டேனியல், பகுதிச் செயலா்கள் சுரேஷ்குமாா், ஜெயக்குமாா், ராமகிருஷ்ணன், மேகநாதன், வட்டச் செயலா்கள் கருப்பசாமி, டென்சிங், கதிரேசன், லியோ ஜான்சன், கவுன்சிலா் ரெக்ஸ்லின், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களைச் சோ்ந்த மீனவ சங்க நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

முள்ளக்காடு பகுதியில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

தொகுதி அலசல் - ஒரத்தநாடு: வெற்றியை எதிா்நோக்கும் திமுக

மாநிலங்களவை நியமன உறுப்பினராக ஹரிவன்ஷ் நாராயண் நியமனம்!

கெங்கவல்லியில் திமுகவில் இணைந்த அதிமுக நிா்வாகி
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

