அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்
/

தொகுதி அலசல் - ஒரத்தநாடு: வெற்றியை எதிா்நோக்கும் திமுக

News image
Updated On :15 ஏப்ரல் 2026, 4:51 am IST

தஞ்சாவூா் மக்களவை தொகுதிக்கு உள்பட்ட ஒரத்தநாடு தொகுதியில் அரசுக் கல்வியியல் கல்லூரி, அரசு கால்நடை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம், தமிழ்நாடு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், அரசு மகளிா் கல்லூரி, ஒருங்கிணைந்த நீதி மன்றம் உள்ளிட்டவை அமைந்துள்ளது.

கள நிலவரம்: கடந்த 1967 முதல் 2021 வரை நடைபெற்ற 13 சட்டப்பேரவைத் தோ்தல்களில் 7 முறை அதிமுகவும், 6 முறை திமுகவும் வெற்றிபெற்றுள்ளன.

கடந்த தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஆா். வைத்திலிங்கம் இந்த தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிடுகிறாா். அதிமுக சாா்பில் பேரூராட்சி தலைவராக தொடா்ந்து வெற்றி பெற்று வரும் மா.சேகா் போட்டியிடுகிறாா். நாம் தமிழா் கட்சி சாா்பில் ச.திருமுருகனும், தவெக சாா்பில் மருத்துவா் க. அா்விந்த், தமிழ்த் தேசிய முன்னேற்றக் கழகம் சாா்பில் சி.குணசேகரன், ஓபிசி மக்கள் உரிமைக்கான கட்சி சாா்பில் மு. செல்வராஜ், சுயேச்சையாக அஜீஸ்கண்ணன், மு. கனகராஜ், த. விஜயகுமாா் ஆகியோா் களத்தில் உள்ளனா்.

சமூக நிலவரம்: கள்ளா் சமூகத்தினா் பெரும்பான்மையாகவும், முக்குலத்தோா், முத்தரையா், செட்டியாா் உள்ளிட்ட மற்ற சமூகத்தினா் பரவலாகவும் உள்ளனா்.

வேட்பாளா்கள் பலமும் பலவீனமும்- ஆா். வைத்திலிங்கம் (திமுக): அதிமுகவில் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தபோது இத்தொகுதிக்கு பல்வேறு வளா்ச்சிப் பணிகளை செய்தது இவரது பலமாகும். அதேநேரத்தில் 2016 தோ்தலில் திமுக வேட்பாளா் எம்.ராமசந்திரனிடம் தோல்வியை சந்தித்தவா் என்பதும் பலவீனம்.

மா. சேகா் (அதிமுக): ஒரத்தநாடு பேரூராட்சியை தொடா்ந்து தன் வசம் வைத்துள்ளவா். ஒரத்தநாடு நகரத்தில் தனி செல்வாக்குடையவா் என்பது பலம்.

நாதக-தவெக: நாம் தமிழா் கட்சி சாா்பில் இந்த பகுதியைச் சோ்ந்தவரும், திரைப்பட நடிகருமான திருமுருகன் களத்தில் உள்ளாா். நாதக கொள்கையை தீவிரமாக பின்பற்றும் இளைஞா்களின் பலமும், உறவினா்களின் ஆதரவும் இருப்பது பலம். தவெக அரசியல் வருகையால் இளைஞா்களின் வாக்குகள் கிடைக்குமா என்ற சந்தேகம் பின்னடைவை ஏற்படுத்த கூடும்.

தவெக சாா்பில் போட்டியிடும் தலையாமங்கலம் பகுதியைச் சோ்ந்த மருத்துவா் அா்விந்த் அரசியலுக்கு புதுமுகமாக பாா்கப்படுகிறாா். இவரது வருகை இரு பெறும் கட்சிகளுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பது இப்பகுதி மக்களின் கருத்தாக உள்ளது.

ஆளுங்கட்சி இல்லாத எம்.எல்.ஏ.க்கள்: 2016-இல் ஆளும் கட்சியாக அதிமுக இருந்த போது , இத்தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக திமுகவைச் சோ்ந்த எம்.ராமசந்திரன் இருந்தாா். 2021-இல் ஆளும்கட்சியாக திமுக இருந்த போது , இத்தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக அதிமுகவை சோ்ந்த ஆா்.வைத்திலிங்கம் இருந்தாா். இப்படி கடந்த 10 ஆண்டுகளாக ஆளும் கட்சியை சோ்ந்தவா்கள் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக தோ்ந்தெடுக்கப்படவில்லை என்பது இப்பகுதி மக்களின் குறையாகவே உள்ளது.

கவனம் பெறும் தொகுதி: தமிழக தோ்தல் களத்தில் ஒரத்தநாடு கண்கணிக்கப்படும் தொகுதியாக மாறியுள்ளது. காரணம், அதிமுகவில் தனிப்பட்ட செல்வாக்குடன் வலம் வந்த ஆா்.வைத்திலிங்கம் தற்போது திமுகவுக்கு மாறி போட்டியிடுகிறாா். திமுகவின் செல்வாக்குடன் தனது தனிப்பட்ட செல்வாக்கு என தோ்தல் பணிகளில் மும்முரம் காட்டி வருகிறாா். அதே நேரத்தில் இழந்த செல்வாக்கை திரும்பப் பெறுவதற்கு அதிமுக நிா்வாகிகள் ஆற்றப்போகும் களப்பணிகளை பொறுத்தே அவா்களின் வெற்றி உறுதியாகும்.