சட்டப்பேரவை தொகுதி விவரக் குறிப்பு: ஒரத்தநாடு - 175!
இந்தத் தொகுதியில் பிரதான நீர் ஆதாரமாக உள்ள கல்லணைக் கால்வாயைத் தூர்வாரி கரைகளைப் பலப்படுத்த வேண்டும். மேலும், அதைச் சார்ந்த கிளை வாய்க்கால்களில் கடைமடை வரை தூர்வார வேண்டும்.

முத்தாம்மாள் சத்திரம்

முத்தாம்மாள் சத்திரம்
தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட ஒரத்தநாடு சட்டப்பேரவைத் தொகுதியில் அரசு கல்வியியல் கல்லூரி, அரசு கால்நடை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம், தமிழ்நாடு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், அரசு மகளிர் கல்லூரி, ஒருங்கிணைந்த நீதிமன்றம் உள்ளிட்டவை ஒருங்கே அமைந்துள்ளது சிறப்பு.
நில அமைப்பு: ஒரத்தநாடு ஒன்றியத்தின் 58 ஊராட்சிகள், தொகுதி சீர மைப்பில் நீக்கப்பட்ட திருவோணம் தொகுதியின் 19 ஊராட்சிகள், தஞ்சாவூர் ஒன்றியத்தின் 19 ஊராட்சிகள் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியத்தின் கல்விராயன்விடுதி ஊராட்சி மற்றும் ஒரத்தநாடு பேரூராட்சியை உள்ளடக்கிய தொகுதி. இந்தத் தொகுதியில் ஏற்கெனவே இருந்த நீடாமங்கலம் ஒன்றியம், தொகுதிச் சீரமைப்பில் மன்னார்குடி தொகுதியில் சேர்க்கப்பட்டது.
இறுதி வாக்காளர்கள்
ஆண்கள் - 1,12,298
பெண்கள் - 1,18,947
மூன்றாம் பாலினம் - 6
மொத்தம் - 2,31,251
இதுவரை இவர்கள்
1967 எல். கணேசன் (திமுக) 45.232
1971 எல். கணேசன் (திமுக) 49,269
1977 டி.எம். தைலப்பன் (திமுக) 31,866
1980 வெள்ளூர் டி. வீராசாமி (அதிமுக) 47,021
1984 வெள்ளூர் டி. வீராசாமி (அதிமுக) 46,717
1989 எல்.கணேசன் (திமுக) 49,554
1991 அழகு திருநாவுக்கரசு (அதிமுக) 68,208
1996 பி.ராஜமாணிக்கம் (திமுக) 68,213
2001 ஆர்.வைத்திலிங்கம் (அதிமுக) 63,836
2006 ஆர். வைத்திலிங்கம் (அதிமுக) 61,595
2011 ஆர். வைத்திலிங்கம் (அதிமுக) 91,724
2016 எம். ராமச்சந்திரன் (திமுக) 84,378
2021 ஆர்.வைத்திலிங்கம் (அதிமுக) 90,063
தீராத பிரச்னைகள்
இந்தத் தொகுதியில் பெரும்பாலும் நெல், தென்னை மற்றும் கரும்பு அதிகளவில் சாகுபடி செய்யப்படுவதால் உற்பத்தியான நெல்லைத் தேக்கமின்றி கொள்முதல் செய்வதற்கான ஒரத்தநாடு ஒன்றிய அளவிலான நுகர்பொருள் வாணிபக் கழகம் அமைக்க வேண்டும். தென்னை சார்ந்த பொருள்களை மூலப்பொருளாகக் கொண்டு இயங்கும் தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும். இந்தத் தொகுதியில் பிரதான நீர் ஆதாரமாக உள்ள கல்லணைக் கால்வாயைத் தூர்வாரி கரைகளைப் பலப்படுத்த வேண்டும். மேலும், அதைச் சார்ந்த கிளை வாய்க்கால்களில் கடைமடை வரை தூர்வார வேண்டும்.
யாரெல்லாம் போட்டி
திமுக சாா்பில் தற்போதைய ஒரத்தநாடு சட்டப்பேரவை உறுப்பினா் ஆா். வைத்திலிங்கம் (கடந்த தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிட்டு வென்றவா்) போட்டியிடுகிறாா். அதிமுக சாா்பில் மத்திய மாவட்டச் செயலா் மா. சேகா், நாம் தமிழா் கட்சி சாா்பில் திரைப்பட நடிகரும், மாநில ஒருங்கிணைப்பாளருமான திருமுருகன், தவெக சாா்பில் டாக்டா் க. அரவிந்த் ஆகியோா் களத்தில் உள்ளனா்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...