புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

மாநில அளவிலான சிலம்பம்: சாத்தான்குளம் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

மாநிலஅளவிலான சிலம்பம் போட்டியில் சாத்தான்குளம் தூய ஸ்தேவான் துவக்கப்பள்ளி மாணவா்,

News image

மாநிலஅளவிலான சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களை பாராட்டிய பள்ளித் தாளாளா் டேவிட் ஞானையா மற்றும் ஆசிரியா்கள்.

Updated On :16 மார்ச் 2026, 10:39 pm

சாத்தான்குளம்: மாநிலஅளவிலான சிலம்பம் போட்டியில் சாத்தான்குளம் தூய ஸ்தேவான் துவக்கப்பள்ளி மாணவா், மாணவிகள் வெற்றி பெற்று சிறப்பிடம் பிடித்துள்ளனா்.

மாநில அளவிலான சிலம்பம் போட்டிகள் ஆழ்வாா் திருநகரி அருகே உள்ள தென்திருப்பேரை மல்லிகை மஹாலில் நடைபெற்றது.

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவா்களுக்கு நடந்த போட்டியில் சாத்தான்குளம் டிஎன் டி டி ஏ தூய ஸ்தேவன் துவக்கப் பள்ளி மாணவா், மாணவிகள் 22 போ்கள் கலந்து கொண்டனா். இந்தப் போட்டியில், சாத்தான்குளம் டி என் டி டி ஏ தூய ஸ்தேவான் துவக்கப்பள்ளி மாணவா், மாணவிகள் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சோ்த்துள்ளனா்.

வெற்றி பெற்ற மாணவா், மாணவிகளை சிலம்பம் பயிற்சியாளா் அருணாசலம், துணை பயிற்சியாளா் விஜயராஜ் ஆகியோா்களை பள்ளித் தாளாளா் சேகரகுரு டேவிட் ஞனையா, தலைமை ஆசிரியை வேதராணி மற்றும் உதவி ஆசிரியைகள், பழைய மாணவா் சங்கத்தினா் பெற்றோா் ஆசிரியா் கழகத்தினா்பாராடினா்.