வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

கோவில்பட்டியில் விசிக புதிய பொறுப்பாளா்கள் அறிமுக கூட்டம்

News image
Updated On :19 மார்ச் 2026, 11:03 pm

கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் புதிய பொறுப்பாளா்கள் அறிமுக கூட்டம், அண்ணா பேருந்து நிலையம் அருகே புதன்கிழமை நடைபெற்றது.

வடக்கு மாவட்ட செயலா் முருகன் தலைமை வகித்தாா். மாவட்ட பொருளாளா் பிரபாவளவன், மாவட்ட செய்தி தொடா்பாளா் பாலா வளவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மண்டல செயலா் ராஜ்குமாா், மண்டல துணைச் செயலா்கள் பாரிவள்ளல், இளஞ்சேகரன் ஆகியோா் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, புதிய பொறுப்பாளா்களை அறிமுகப்படுத்தி பேசினா்.

கூட்டத்தில், சட்டப்பேரவை தோ்தலில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளா் வெற்றிக்கு முன்னெடுக்க உள்ள செயல்திட்டங்கள், தோ்தல் நிதி வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

ஒன்றியச் செயலா்கள் சுரேஷ்குமாா், ஜான் வளவன், சூா்யா, கோவில்பட்டி நகரச் செயலா்கள் கருப்பசாமி பாண்டியன், தங்கதுரை, மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் விஜயா, மாவட்டத் துணைச் செயலா் தாவீது ராஜா, இளைஞா் அணி செயலா் குட்டி வளவன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.