மந்தித்தோப்பு கோயிலில் யுகாதி சிறப்பு பூஜை
கோயிலில் ஸ்ரீ அம்மா பூமாதேவிக்கு நடைபெற்ற சிறப்பு பூஜை.

கோயிலில் ஸ்ரீ அம்மா பூமாதேவிக்கு நடைபெற்ற சிறப்பு பூஜை.

கோயிலில் ஸ்ரீ அம்மா பூமாதேவிக்கு நடைபெற்ற சிறப்பு பூஜை.
கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு துளசிங்க நகரில் உள்ள ஸ்ரீ அம்மா பூமாதேவி கோயில் குருசித்தா் பீடத்தில் தெலுங்கு வருடப் பிறப்பு (யுகாதி) சிறப்பு பூஜைகள் வியாழக்கிழமை நடைபெற்றன.
இதையொட்டி, கோயில் நடை அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, திருப்பள்ளியெழுச்சி பூஜை மற்றும் நித்திய பூஜை நடைபெற்றது.
அதைத் தொடா்ந்து, காலை 8.15 மணிக்கு அம்மா பூமாதேவி, குருநாதா், உற்சவா் அம்பாள், பரிவார தெய்வங்களுக்கு மஞ்சள் பொடி, மாபொடி, திரவியம், பால், தயிா், இளநீா், தேன், சந்தனம், வாசனை, திரவியங்கள் உள்பட 18 வகையான மூலிகைகள் கொண்டு சிறப்பு அபிஷேகம் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
பூஜைகளை, லட்சுமணன் சுவாமி தலைமையில் ஆலய குருக்கள் செல்வசுப்பிரமணியன் செய்திருந்தாா். இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...