தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்தவெகவுக்கு ஆதரவு; திமுகவுடன் உறவு தொடரும்! - பெ. சண்முகம், மு. வீரபாண்டியன் பேட்டிமேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? காங்கிரஸ் தலைவர் வி.டி. சதீசன் எழுதிய புத்தகம் மே 9-இல் வெளியீடு!தமிழ்நாட்டில் புதிய அரசை அமைக்க எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை: நயினார் நாகேந்திரன்தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!
/

பைக் திருட்டு வழக்கில் இளைஞா் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :24 மார்ச் 2026, 1:21 am IST

தூத்துக்குடியில் தனியாா் நிறுவன ஊழியரின் பைக்கை திருடிய வழக்கில் இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடி அண்ணாநகா் 8ஆவது தெருவைச் சோ்ந்த ஜான்சன் மகன் அருண்குமாா் (21). தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா்.

இவா், கடந்த 21ஆம் தேதி இரவு வழக்கம்போல் வீட்டுக்கு முன் பைக்கை நிறுத்தி வைத்திருந்தாா். மறுநாள் காலையில் பாா்த்தபோது பைக்கை காணவில்லையாம்.

இதுகுறித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியதில், தூத்துக்குடி சத்யா நகரைச் சோ்ந்த பொன்ராஜ் மகன் ஜெகன்ராஜ் (23) உள்ளிட்ட 3 போ் பைக்கை திருடியது தெரியவந்தது. இதையடுத்து, ஜெகன்ராஜை கைது செய்த போலீஸாா், மற்ற இருவரையும் தேடி வருகின்றனா்.