ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு! ஏப். 21 மாலை 6 மணி முதல் எந்த வகையிலும் பிரசாரம் கூடாது! - தேர்தல் ஆணையம்234 என்ற கணக்கை நேராக்கிவிட்டாரா தவெக தலைவர் விஜய்?பேரவைத் தேர்தல்! மோசமான குற்ற வழக்குகளைக் கொண்ட வேட்பாளர்களில் எந்தக் கட்சி முதலிடம்?பட்டப்படிப்பு மட்டும் போதாது.. செய்யறிவு உங்கள் வேலையை பறிக்காமல் இருக்க என்ன செய்யலாம்? ஆர்எஸ்எஸ் - பாஜகவை எதிர்க்கும் துணிச்சல்மிக்கவர்கள் தமிழர்கள்! குளச்சலில் ராகுல் பேச்சுஅக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

தொடர்ந்து 6 முறை வெற்றி! 26 ஆண்டுகளாக எம்எல்ஏ!

அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணனின் அரசியல் பயணம் குறித்து...

News image

அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் - (கோப்புப் படம்)

Updated On :23 மார்ச் 2026, 11:02 pm

திருச்செந்தூர் சட்டப் பேரவைத் தொகுதியில் நடைபெற்ற தேர்தல்களில் தொடர்ந்து 6 முறை வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார், தமிழக மீன்வளம்- மீனவர் நலன், கால்நடைத் துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 பேரவைத் தொகுதிகளில் முக்கியத்துவம் கொண்டது திருச்செந்தூர் தொகுதி. இந்தத் தொகுதி 15 பொதுத் தேர்தல்களையும், 2 இடைத் தேர்தல்களையும் சந்தித்துள்ளது. அதில், திமுக 8 முறையும். அதிமுக 6 முறையும், காங்கிரஸ் 2 முறையும், விவசாயத் தொழிலாளர் கட்சி ஒருமுறையும் வென்றுள்ளன.

2001 ஆம் ஆண்டு தேர்தலில் இத்தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் முதல்முறையாக வெற்றிபெற்று அமைச்சரானார். தொடர்ந்து, தற்போது வரை 5 பொதுத் தேர்தல், ஓர் இடைத்தேர்தல் என 6 தேர்தல்களிலும் அவர் வெற்றிபெற்று 26 ஆண்டுகளாக உறுப்பினராகத் தொடர்ந்து சாதனை படைத்துவருகிறார்.

2001, 2006 தேர்தல்களில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அவர், 2009 இடைத்தேர்தல், 2011, 2016, 2021 பொதுத் தேர்தல்களில் திமுக வேட்பாளராகக் களமிறங்கி வெற்றிவாகை சூடினார். திருச்செந்தூர் தொகுதியைக் கைப்பற்றும் கட்சியே ஆட்சியை பிடிக்கும் என்றிருந்த சரித்திரத்தை மாற்றியமைத்தவர் அவர்.

2006 தேர்தலில் இங்கு அதிமுக சார்பில் அவர் வெற்றி பெற்ற நிலையில், தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்தது. தொடர்ந்து, 2009 இல் நடைபெற்ற இடைத்தேர்தலில் அவர் திமுக சார்பில் போட்டியிட்டு வென்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.