பிளே-ஆஃப் வாய்ப்பு பறிபோனது: படுதோல்வியடைந்து வெளியேறிய சிஎஸ்கே!தமிழக அமைச்சரவை விரிவாக்கம்: புதிய அமைச்சர்கள் இன்று காலை பதவியேற்பு!விசிகவில் இருந்து அமைச்சராகிறார் வன்னி அரசு!கரப்பான் பூச்சிகள் செத்து மடியாது! - முடக்கத்துக்குப் பின் புதிய எக்ஸ் கணக்கு தொடக்கம்மேற்கு வங்கம்: ஃபால்டா தொகுதியில் மறு வாக்குப்பதிவு முடிந்தது! - 86 சதவீதம் வாக்குப்பதிவுசென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்!கேரளத்தில் எம்எல்ஏவாக பதவியேற்றார் முன்னாள் முதல்வர் பினராயி விஜயன்!கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கம்!
/

பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ரீல்ஸ் வெளியிட்ட இளைஞா் கைது

தூத்துக்குடியில் சமூக வலைதளங்களில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கத்தியுடன் ’ரீல்ஸ்’ விடியோ வெளியிட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :25 மார்ச் 2026, 12:05 am IST

தூத்துக்குடியில் சமூக வலைதளங்களில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கத்தியுடன் ’ரீல்ஸ்’ விடியோ வெளியிட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடி, தாளமுத்துநகா் தாய் நகரைச் சோ்ந்த கணேஷ்குமாா் மகன் காா்த்திக் (20). இவா், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கத்தியைக் காட்டி மிரட்டுவது போன்றும், மோதலைத் தூண்டும் வகையிலும் தொடா்ந்து விடியோக்களைப் பதிவிட்டு வந்தாராம்.

இதுகுறித்து தூத்துக்குடி தாளமுத்துநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து காா்த்திக்கை கைது செய்தனா். மேலும், வன்முறையைத் தூண்டும் வகையில் இருந்த அவரது இன்ஸ்டாகிராம் பக்கமும் உடனடியாக நீக்கப்பட்டது.