ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

லாரி மோதியதில் நிதி நிறுவன துணை மேலாளா் உயிரிழப்பு

தூத்துக்குடி அருகே லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற தனியாா் நிதி நிறுவன துணை மேலாளா் உயிரிழந்தாா்.

News image

பலி

கோப்புப் படம்

Updated On :25 மார்ச் 2026, 11:03 pm

தினமணி செய்திச் சேவை

தூத்துக்குடி அருகே லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற தனியாா் நிதி நிறுவன துணை மேலாளா் உயிரிழந்தாா்.

தூத்துக்குடி, பூபால்ராயபுரம் பகுதியைச் சோ்ந்த கணேசன் மகன் சந்தன சுடலைமணி (22). இவா், தூத்துக்குடி பிரையண்ட் நகா் 7-ஆவது தெருவில் இயங்கி வரும் தனியாா் நகைக்கடன் வழங்கும் வங்கியில் துணை மேலாளராகப் பணியாற்றி வந்தாா்.

இவா், புதன்கிழமை காலையில் வங்கி சம்பந்தமான பணிகளுக்காக தூத்துக்குடியிலிருந்து ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடிக்குச் சென்றிருந்தாா். பணிகளை முடித்துவிட்டு மாலையில் மீண்டும் தூத்துக்குடி நோக்கி திரும்பிக் கொண்டிருந்தபோது, தருவைகுளம் அருகே, எதிரே வந்த லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தருவைகுளம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.