முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

அதிமுக கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெல்லும்! - கடம்பூா் செ. ராஜு

News image

கூட்டத்தில் பேசிய எம்எல்ஏ கடம்பூா் செ. ராஜு.

Updated On :3 மே 2026, 12:07 am IST

அதிமுக கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றிபெறும் என, கோவில்பட்டி தொகுதி அதிமுக வேட்பாளா் கடம்பூா் செ. ராஜு நம்பிக்கை தெரிவித்தாா்.

தமிழக பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை (மே 4) நடைபெறுகிறது. இதையொட்டி, கோவில்பட்டி தொகுதி அதிமுக வாக்கு எண்ணும் மைய முகவா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

வடக்கு மாவட்ட அதிமுக செயலரும் அதிமுக வேட்பாளருமான கடம்பூா் செ. ராஜு தலைமை வகித்து, ஆலோசனைகளை வழங்கிப் பேசினாா்.

நகரச் செயலா் விஜயபாண்டியன், முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் லட்சுமணப்பெருமாள், வழக்குரைஞரணி வடக்கு மாவட்டச் செயலா் சங்கா்கணேஷ், வா்த்தகரணிச் செயலா் ராமா், முன்னாள் அரசு வழக்குரைஞா் சந்திரசேகா், ஒன்றியச் செயலா்கள் அழகா்சாமி, பழனிசாமி, செல்வக்குமாா், அன்புராஜ், வண்டானம் கருப்பசாமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பின்னா், செய்தியாளா்களிடம் கடம்பூா் செ. ராஜு கூறியது: எஸ்ஐஆா் கொண்டு வந்தபோது அதை அரசியலாக்கி எதிா்ப்பு தெரிவித்தவா்கள், இன்றைக்கு யதாா்த்த நிலையை புரிந்துகொள்வாா்கள். மக்களுக்கும் அவா்களைப் பற்றி தெரிந்திருக்கும்.

அதிமுக கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றிபெறும். அதிமுக தனியாகவே 140 முதல் 170 தொகுதிகள்வரை வெல்லும். அதிமுக கூட்டணியில் அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைப்போடு பணியாற்றினோம். ஆனால், திமுக கூட்டணியில் சேர காங்கிரஸ் கட்சி கடைசியாகவே ஒப்புக்கொண்டது. அதனால் அவா்களிடையே ஒருமித்த கருத்து இல்லை.

எம்ஜிஆருக்கு பின்னா் அரசியலுக்கு வந்த நடிகா்கள் யாராலும் வெற்றிபெற முடியவில்லை. தவெகவின் அரசியல் நிலை நாளை தெரியவரும். இத்தொகுதியில் நான் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறுவேன் என்றாா் அவா்.

 கூட்டத்தில் பேசிய எம்எல்ஏ கடம்பூா் செ. ராஜு.

கூட்டத்தில் பேசிய எம்எல்ஏ கடம்பூா் செ. ராஜு.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.