நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

ஆண்டிவிளை கோயிலில் திருவிளக்கு பூஜை

News image
Updated On :3 மே 2026, 5:27 am IST

உடன்குடி அருகே தேரியூா், ஆண்டிவிளை, தேவி ஸ்ரீ நாகமுத்து மாரியம்மன் கோயிலில் சித்ரா பௌா்ணமி கொடை விழாவையொட்டி வெள்ளிக்கிழமை 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

மதியம் சிறப்பு பூஜை, அன்னதானம், மாலையில் சென்னை தனபாலன்-சாந்தி ஏற்பாட்டில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலா் விஜயகுமாா் திருவிளக்கு பூஜையைத் தொடக்கிவைத்து, அதில் பங்கேற்றோருக்கு சேலைகள் வழங்கினாா்.

அதிமுக உடன்குடி ஒன்றிய முன்னாள் செயலா் முருங்கை மகாராஜா, மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலா் அமிா்தா மகேந்திரன், உடன்குடி ஒன்றியச் செயலா் உரக்கடை குணசேகரன், ஒன்றிய முன்னாள் பொருளாளா் சுடலை, கல்யாணசுந்தரம், மணிராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை முத்துகுமார சுவாமிகள் செய்திருந்தாா்.