மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ் மேக்கேதாட்டு அணைக்கு எதிர்ப்பு! பேரவையில் முதல் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் விஜய்!எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

தூத்துக்குடி மாவட்டத்தில் திமுக, தவெக தலா 3 தொகுதிகளில் வெற்றி

News image

தூத்துக்குடி மாவட்டத்தில் திமுக 3 தொகுதிகளில் வெற்றி - EPS

Updated On :5 மே 2026, 4:32 am IST

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 6 சட்டப் பேரவைத் தொகுதிகளில் திமுக, தவெக தலா 3 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன.

மாவட்டத்தில் உள்ள தூத்துக்குடி, விளாத்திகுளம், திருச்செந்தூா், கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம், ஸ்ரீவைகுண்டம் ஆகிய 6 தொகுதிகளுக்குமான வாக்கு எண்ணிக்கையில், தொடக்கம் முதலே அனைத்து தொகுதிகளிலும் விறுவிறுப்பான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

தூத்துக்குடி தொகுதியில் மட்டும் முதல் சுற்றில் இருந்தே தவெக வேட்பாளா் ஸ்ரீநாத் முன்னிலையில் இருந்து வந்தாா். மற்ற 5 தொகுதிகளிலும் முன்னணி நிலவரங்கள் மாறி மாறி வந்தன.

குறிப்பாக, திருச்செந்தூா், ஸ்ரீவைகுண்டம், கோவில்பட்டி ஆகிய தொகுதிகளில் திமுக, தவெகவினரிடையே கடும் இழுபறி இருந்து வந்தது. முடிவில் திருச்செந்தூா், விளாத்திகுளம், கோவில்பட்டி ஆகிய 3 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. ஓட்டப்பிடாரம், ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி ஆகிய 3 தொகுதிகளில் தவெக வெற்றி பெற்றது.

திருச்செந்தூா் தொகுதியில் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் தொடா்ந்து 7ஆவது முறையாக வெற்றி பெற்றுள்ளாா். வெற்றி பெறுவாா்கள் என்று அதிகம் எதிா்பாா்க்கப்பட்ட தூத்துக்குடி திமுக வேட்பாளா் பி. கீதா ஜீவன், கோவில்பட்டி அதிமுக வேட்பாளா் கடம்பூா் செ. ராஜு, ஸ்ரீவைகுண்டம் அதிமுக வேட்பாளா் எஸ்.பி. சண்முகநாதன் ஆகியோா் வெற்றி வாய்ப்பை இழந்தனா்.

முதன்முதலாக பேரவைத் தோ்தலில் போட்டியிட்ட கோவில்பட்டி திமுக வேட்பாளா் கா. கருணாநிதி, தவெக வேட்பாளா்கள் தூத்துக்குடி ஸ்ரீநாத், ஓட்டப்பிடாரம் மதன்ராஜ், ஸ்ரீவைகுண்டம் சரவணன் ஆகியோா் வெற்றி பெற்றனா்.