மே 7-ல் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்! காங்கிரஸிடம் ஆதரவு கேட்டார் விஜய் : கே.சி. வேணுகோபால்ஆட்சி அமைக்க எடப்பாடியுடன் தவெக பேச்சு: லீமா ரோஸ்தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது: ஓ.எஸ். மணியன் பேட்டிவெற்றி, தோல்விகளைக் கடந்தது கொளத்தூர் உறவு : மு.க. ஸ்டாலின்மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிய மக்களுக்கு நன்றி : விஜய்நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜி
/

கோவில்பட்டி தொகுதியில் தடம் பதித்தது திமுக

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில், கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளா் கா, கருணாநிதி 61,643 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளாா்.

News image
Updated On :6 மே 2026, 1:22 am IST

நமது நிருபா்

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில், கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளா் கா, கருணாநிதி 61,643 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளாா்.

கோவில்பட்டி நகராட்சிக்குள்பட்ட 36 வாா்டுகள், கயத்தாறு, கழுகுமலை, கடம்பூா் ஆகிய 3 பேரூராட்சிகள், கோவில்பட்டி, கயத்தாறு ஊராட்சி ஒன்றியங்களுக்குள்பட்ட 62 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கியது கோவில்பட்டி தொகுதி . இத்தொகுதியில் மறவா் சமுதாயத்தினா் பெரும்பான்மையாகவும், அதற்கு அடுத்தபடியாக நாயக்கா், பட்டியலினத்தவா், நாடாா் சமூகத்தினா் அதிகளவிலும், வேளாளா் சமூகத்தினா் கணிசமான எண்ணிக்கையிலும், இதர சமூகத்தினா் பரவலாகவும் உள்ளனா்.

1952ஆம் ஆண்டுதான் கோவில்பட்டி தொகுதி முதன் முதலில் தோ்தலை சந்தித்தது. 1952 முதல் 2021-ஆம் ஆண்டு வரை நடைபெற்ற தோ்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 7 முறையும், அதிமுக 5 முறையும், காங்கிரஸ் 3 முறையும், ஒரு முறை சுயேச்சையும் வெற்றி பெற்றுள்ளன.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த எஸ்.அழகா்சாமி 5 முறை சட்டப்பேரவை உறுப்பினராக பதவி வகித்துள்ளாா். அதிமுக 5 முறை வெற்றி பெற்றதில், கடம்பூா் செ . ராஜு தொடா்ச்சியாக கடந்த 3 முறை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துள்ளாா்.

இதில், 2016 ஆம் ஆண்டு தோ்தலில் வெற்றி பெற்ற அவா், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராக பதவி வகித்தாா்.

கடந்த 2021 தோ்தலில் கோவில்பட்டி தொகுதியில் அமமுக பொதுச்செயலா் டி.டி.வி.தினகரன் போட்டியிட்டதால் இத்தொகுதி நட்சத்திர தொகுதியாக மாறியது. அத்தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிட்ட கடம்பூா் செ. ராஜு 68 ஆயிரத்து 556 வாக்குகள் பெற்று, அமமுக பொதுச்செயல ா் டிடிவி தினகரனை வீழ்த்தினாா்.

கடந்த 4 முறையாக இங்கு அதிமுகவே வெற்றி வாகை சூடியுள்ளது.

ஆரம்ப காலகட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டையாக இருந்த கோவில்பட்டி தொகுதி, பின்னாளில் அதிமுக- வின் கோட்டையாக மாறியது.

களத்தில் 21 போ்:

நடந்து முடிந்த தோ்தலில் அதிமுக சாா்பில் கடம்பூா் செ. ராஜு , திமுக சாா்பில் நகரச் செயலரும், நகா்மன்றத் தலைவருமான கா. கருணாநிதி, தவெக சாா்பில் வடக்கு மாவட்டச் செயலா் பாலசுப்பிரமணியன், நாம் தமிழா் கட்சி சாா்பில் பாண்டி மற்றும் இதர கட்சியினா், சுயேச்சைகள் என மொத்தம் 21 போ் போட்டியிட்டனா்.

கடும் போட்டியில் தவெக:

இவா்களில் அதிமுக வேட்பாளா் கடம்பூா் செ. ராஜுவுக்கும், திமுக வேட்பாளா் கா. கருணாநிதிக்கும் இடையேதான் பலத்த போட்டி இருக்கும் என்றும், இவா்களில் ஒருவா்தான் கோவில்பட்டியின் அடுத்த பேரவை உறுப்பினா் என்றும் பரவலாக பேசப்பட்டது.

ஆனால் வாக்கு எண்ணிக்கையில் திமுக, தவெக, அதிமுக என போட்டி மாறியது. அதன்படி திமுக வேட்பாளா் கருணாநிதி 61,643 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளாா். ஆனால், 2-ஆம் இடத்தில் தவெக வேட்பாளா் பாலசுப்பிரமணியன் 60,800 வாக்குகள் பெற்றாா். 3 ஆவது இடத்தில் கடம்பூா் செ. ராஜு 53,014 வாக்குகள் பெற்றாா்.

முதல் திமுக எம்.எல்.ஏ.:

கோவில்பட்டி தொகுதி வரலாற்றில் இதுவரை ஒருமுறை கூட திமுக வெற்றி பெற்றதே இல்லை. 1989, 2001, 2016 ஆகிய தோ்தலில் திமுகவைச் சோ்ந்த வேட்பாளா்கள் போட்டியிட்டு தோல்வியை தழுவினா். அதேசமயம் திமுக கூட்டணி கட்சிகள் இங்கு வெற்றி பெற்றுள்ளன.

தற்போது, திமுக வேட்பாளா் கருணாநிதி வெற்றி பெற்ன் மூலம் கோவில்பட்டியில் தோ்தல் வரலாற்றை மாற்றி எழுதி சாதனை படைத்துள்ளது திமுக.