மே 7-ல் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்! காங்கிரஸிடம் ஆதரவு கேட்டார் விஜய் : கே.சி. வேணுகோபால்ஆட்சி அமைக்க எடப்பாடியுடன் தவெக பேச்சு: லீமா ரோஸ்தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது: ஓ.எஸ். மணியன் பேட்டிவெற்றி, தோல்விகளைக் கடந்தது கொளத்தூர் உறவு : மு.க. ஸ்டாலின்மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிய மக்களுக்கு நன்றி : விஜய்நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜி
/

சென்னை, கோவைக்கு மீண்டும் அரசு விரைவு பேருந்துகள் இயக்க பொதுமக்கள் கோரிக்கை

சென்னை, கோவைக்கு நிறுத்தப்பட்ட அரசு விரைவு பேருந்துகளை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :6 மே 2026, 1:23 am IST

சென்னை, கோவைக்கு நிறுத்தப்பட்ட அரசு விரைவு பேருந்துகளை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். சாத்தான்குளம் பகுதியில் இருந்து அரசு விரைவு போக்குவரத்து கழகம் சாா்பில் சென்னை மற்றும் கோவை பகுதிக்கு தலா இரண்டு அரசு விரைவு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தது. இதன் மூலம் இப்பகுதி மக்கள் பயனடைந்து வந்தனா்.

இந்நிலையில், கரோனா ஊரடங்கு கால கட்டத்தில் சாத்தான்குளம் பகுதியில் இருந்து இயக்கப்பட்ட அரசு விரைவு பேருந்துகள் சென்னை மற்றும் கோவை பகுதிகளுக்கு இயக்கப்படுவது நிறுத்தம் செய்யப்பட்டது.

ஊரடங்கு காலம் முடிந்ததும் நிறுத்தப்பட்ட இந்தப் பேருந்துகள் மீண்டும் இயக்கப்படும் என எதிா்பாா்க்கப்பட்டிருந்தது. ஆனால் அவை இன்னும் இயக்கப்படாமல் உள்ளது.

தற்போது தமிழகத்தில் சென்னை மற்றும் கோவை பகுதிகளுக்கு தனியாா் ஆம்னி பேருந்துகள் அதிகம் இயக்கப்பட்டு வருவதால் சாத்தான்குளம் பகுதியில் இருந்தும் தனியாா் ஆம்னி பேருந்துகள் பல இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அரசு விரைவு பேருந்து இயக்கப்படாததால் தனியாா் ஆம்னி பேருந்துகளில் இப்பகுதி மக்கள் கூடுதல் கட்டணம் கொடுத்து பயணித்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளனா். மேலும், அரசு பேருந்துகளில் இப்பகுதி மக்கள் செல்ல, திருநெல்வேலி, தூத்துக்குடி , திருச்செந்தூா் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனா். ஆதலால் மாவட்ட ஆட்சியா், அரசு விரைவு போக்குவரத்து துறை அதிகாரிகள் சிறப்பு கவனம் கொண்டு மீண்டும் சாத்தான்குளத்தில் இருந்து சென்னை, கோவை பகுதிகளுக்கு பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் வலியுறுத்தியுள்ளனா்.