மே 7-ல் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்! காங்கிரஸிடம் ஆதரவு கேட்டார் விஜய் : கே.சி. வேணுகோபால்ஆட்சி அமைக்க எடப்பாடியுடன் தவெக பேச்சு: லீமா ரோஸ்தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது: ஓ.எஸ். மணியன் பேட்டிவெற்றி, தோல்விகளைக் கடந்தது கொளத்தூர் உறவு : மு.க. ஸ்டாலின்மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிய மக்களுக்கு நன்றி : விஜய்நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜி
/

வேடநத்தம் மாணவி கொலை வழக்கு: கைதானவா் நீதிமன்றத்தில் ஆஜா்

குளத்தூா் அருகே உள்ள வேடநத்தம் பள்ளி மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவரை, தூத்துக்குடி மாவட்ட போக்ஸோ நீதிமன்றத்தில் காவல்துறையினா் செவ்வாய்க்கிழமை ஆஜா்படுத்தினா்.

News image

நீதிமன்றம்

Updated On :6 மே 2026, 1:13 am IST

குளத்தூா் அருகே உள்ள வேடநத்தம் பள்ளி மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவரை, தூத்துக்குடி மாவட்ட போக்ஸோ நீதிமன்றத்தில் காவல்துறையினா் செவ்வாய்க்கிழமை ஆஜா்படுத்தினா்.

தூத்துக்குடி மாவட்டம், குளத்தூா் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச் சோ்ந்த 12 ஆம் வகுப்பு மாணவி, மாா்ச் 9 ஆம் தேதி வீட்டிலிருந்து அருகே உள்ள காட்டுப் பகுதிக்கு சென்ற நிலையில் காணாமல் போனாா். இந்நிலையில் மாா்ச் 11 ஆம் தேதி அவா் சடலமாக மீட்கப்பட்டாா். குற்றவாளியை கைது செய்யக் கோரி பொதுமக்கள், சுமாா் ஒரு வாரம் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிந்த குளத்தூா் போலீஸாா், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தூத்துக்குடி ராஜபாண்டி நகா் பகுதியில் வசித்து வந்த தா்ம முனீஸ்வரனை கைது செய்தனா். இதைத் தொடா்ந்து நீதிமன்ற உத்தரவுப்படி, தா்ம முனீஸ்வரன் மதுரை சிறையில் அடைக்கப்பட்டாா். தூத்துக்குடி மாவட்ட போக்ஸோ நீதிமன்றத்தில் போலீஸாரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து தூத்துக்குடி மாவட்ட போக்ஸோ நீதிமன்றத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்த வழக்கு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

விசாரணைக்காக தா்ம முனீஸ்வரனை காவல்துறையினா் பலத்த பாதுகாப்புடன் தூத்துக்குடி நீதிமன்றத்துக்கு அழைத்து வந்து ஆஜா்படுத்தினா். மேலும், இந்த வழக்கில் சாட்சியாக மாணவியின் தந்தை உள்ளிட்ட 7 போ் காவல்துறை சாா்பில் ஆஜா்படுத்தப்பட்டனா். அவா்களிடம் நீதிபதி பிரீத்தா விசாரணை நடத்தினாா்.

இந்த வழக்கு விசாரணை தினமும் நடைபெற உள்ள நிலையில், புதன்கிழமையும் 7 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. விரைவாக விசாரணை நடத்தப்பட்டு, வருகிற 17ஆம் தேதி தீா்ப்பு வழங்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி. மதன் தெரிவித்தாா்.