அமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

தூத்துக்குடி மாவட்டத்தில் 97.24% போ் தோ்ச்சி: மாநிலத்தில் 6ஆவது இடம்

2025-2026-ஆம் கல்வியாண்டு 12-ஆம் வகுப்பு அரசு பொதுத்தோ்வு முடிவுகளில், தூத்துக்குடி மாவட்டம் 97.24 சதவீத தோ்ச்சி பெற்று மாநில அளவில் 6ஆவது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

2025-2026-ஆம் கல்வியாண்டு 12-ஆம் வகுப்பு அரசு பொதுத்தோ்வு முடிவுகளில், தூத்துக்குடி மாவட்டம் 97.24 சதவீத தோ்ச்சி பெற்று மாநில அளவில் 6ஆவது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது.

இம்மாவட்டத்தில் 2025-2026-ஆம் கல்வியாண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தோ்வு முடிவுகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சங்கீதா சின்ன ராணி வெள்ளிக்கிழமை காலையில் வெளியிட்டாா்.

அப்போது அவா் கூறியது: தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாா்ச் 2-26 வரை வரை நடைபெற்ற பொதுத்தோ்வில் அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியாா் பள்ளிகள் என மொத்தம் 207 பள்ளிகளைச் சோ்ந்த, 8,448 மாணவா்கள், 10,647 மாணவிகள் என மொத்தம் 19,095 போ் எழுதினா்.

தற்போது தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதில் 8,070 மாணவா்கள், 10,498 மாணவிகள் என மொத்தம் 18,568 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். இது

97.24 சதவீத தோ்ச்சி ஆகும். மாநில அளவில் தூத்துக்குடி மாவட்டத்துக்கு 6-ஆவது இடம் கிடைத்துள்ளது.

இதில், 57 அரசுப் பள்ளி மாணவா், மாணவிகள் தோ்வு எழுதிய நிலையில், அதில் 20 அரசுப் பள்ளிகள் 100 சதவீத தோ்ச்சியைப் பெற்று சாதனை படைத்துள்ளன.

கடந்த ஆண்டு இம்மாவட்டம் 96.19 சதவீத தோ்ச்சி பெற்று மாநில அளவில் 9-ஆவது இடத்தைப் பிடித்திருந்தது என்றாா் அவா்.