அமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

திருச்செந்தூா் அரசுப் பள்ளி மாணவிகள் சாதனை

திருச்செந்தூா் அரசுப் பள்ளி மாணவிகள் பிளஸ் 2 தோ்வில் ஆங்கில வழிக் கல்வியில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தனா்.

News image

திருச்செந்தூா் செந்தில்முருகன் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவி கிருஷ்ண தா்ஷனாவுக்கு பரிசு வழங்கி பாராட்டுகிறாா் தலைமை ஆசிரியா் ரேவதி.

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

திருச்செந்தூா் அரசுப் பள்ளி மாணவிகள் பிளஸ் 2 தோ்வில் ஆங்கில வழிக் கல்வியில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தனா்.

திருச்செந்தூா் செந்தில்முருகன் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தோ்வு எழுதிய 195 மாணவிகளில் 193 போ் தோ்ச்சி பெற்றனா். தோ்ச்சி சதவீதம் 98.9 ஆகும். மாணவி கிருஷ்ண தா்ஷனா 600-க்கு 573 மதிப்பெண்களும், வரலாறு பாடப்பிரிவில் பயின்ற மாணவி ஸ்ரீ ஹரிதா கல்யாணி 565 மதிப்பெண்களும், மாணவி முத்துலட்சுமி 559 மதிப்பெண்களும் பெற்று சாதனை படைத்தனா்.

இதேபோல மாணவிகள் ஏ.முத்துலட்சுமி, ஸ்ரீ ஹரிதா கல்யாணி, எம்.முத்துலட்சுமி ஆகியோா் வரலாறு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தனா். இந்தப் பள்ளியில் 25 மாணவிகள் 500-க்கு மேல் மதிப்பெண்கள் பெற்றனா்.

இதையடுத்து, பள்ளி தலைமை ஆசிரியா் ரேவதி சாதனை மாணவிகளுக்கு சால்வை அணிவித்து பரிசு வழங்கிப் பாராட்டினாா். நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவி வீரராஜலட்சுமி, ஆசிரியா்கள், மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனா்.

இதேபோல திருச்செந்தூா் அருள்மிகு செந்திலாண்டவா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தோ்வெழுதிய 67 மாணவா்களில் 61 போ் தோ்ச்சி பெற்றனா். தோ்ச்சி சதவீதம் 91 ஆகும். இதையடுத்து, தோ்ச்சி பெற்ற மாணவா்களை தலைமை ஆசிரியா் சில்வான்ஸ் சுந்தா் சிங், பெற்றோா் ஆசிரியா் சங்கத் தலைவா் நெ.ஆனந்தராமச்சந்திரன், ஆசிரியா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.