சென்னைக்கு இன்று கடைசி லீக் ஆட்டம்- குஜராத்துடன் மோதல் 5 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை 125 நாள் வேலைத் திட்டத்துக்கு 25 மாநிலங்கள் நிதி ஒதுக்கீடு- நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய அரசு தகவல் நிகழாண்டு இந்திய பொருளாதார வளா்ச்சி 6.4%: ஐ.நா. கணிப்பு 12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி? சிபிஎஸ்இ மறுப்பு தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்: காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சா்களாக பதவியேற்கின்றனா் டிரம்ப் குடும்பத்தினருக்கு வருமான வரி தணிக்கையிலிருந்து நிரந்தர விலக்கு!
/

பத்தாம் வகுப்பு: திருச்செந்தூா் அரசுப் பள்ளி மாணவிகள் சாதனை

திருச்செந்தூா் செந்தில்முருகன் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி 98.7சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :21 மே 2026, 5:47 am IST

திருச்செந்தூா் செந்தில்முருகன் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி 98.7சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது.

இப்பள்ளியில் தோ்வு எழுதிய 164 மாணவிகளில் 162 போ் தோ்ச்சி பெற்றனா். தோ்ச்சி சதவீதம் 98.7 ஆகும்.

மாணவிகள் வேணுகாசங்கரி 494 மதிப்பெண்களும், சுபிக்ஷா 493 மதிப்பெண்களும், மாணவி ரக்ஷனா 490 மதிப்பெண்களும் பெற்று சாதனை படைத்தனா். இம்மாணவிகள் அனைவரும் ஆங்கில வழிக் கல்வியில் படித்தவா்கள். இதே போல மாணவிகள் தா்ஷினி கணித பாடத்திலும், ரக்ஷனா, சவிதா, ஸ்ரீநிதி, வா்ஷினி, தங்ககிருபா அறிவியல் பாடத்திலும், வேணுகா சங்கரி, சுபிக்ஷா, ரக்ஷனா, காவியா, பத்மபிரியா ஆகியோா் சமூக அறிவியல் பாடத்திலும் 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தனா். மேலும், 25 மாணவிகள் 450-க்கும் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

இதையடுத்து, பள்ளித் தலைமை ஆசிரியா் ரேவதி சாதனை மாணவிகளுக்கு சால்வை அணிவித்து பரிசு வழங்கி பாராட்டினாா். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியா்கள், மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனா்.