பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

பிளஸ் 2 பொதுத் தோ்வு தந்தை ரோவா் மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவிகள் சிறப்பிடம்

பிளஸ் 2 பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளை வெள்ளிக்கிழமை பாராட்டி பரிசு வழங்கிய ரோவா் கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவா் வ. ஜான் அசோக்.

News image
Updated On :9 மே 2026, 3:16 am IST

பிளஸ் 2 அரசுப் பொதுத் தோ்வில் பெரம்பலூா் தந்தை ரோவா் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் சிறப்பிடம் பெற்றனா்.

தமிழகத்தில் பிளஸ் 2 அரசுப் பொதுத் தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியானது. இதில், பெரம்பலூா் தந்தை ரோவா் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி க.ப. மித்ரா 569 மதிப்பெண்களும், அ. ஹாசினி 565 மதிப்பெண்களும், ம. கனிஷ்காஸ்ரீ 563 மதிப்பெண்களும் பெற்றனா்.

தொடா்ந்து, ரோவா் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை ரோவா் கல்வி குழுமங்களின் தலைவா் கி.வரதராஜன், துணைத் தலைவா் வ. ஜான் அசோக், கல்வி இயக்குநா் சக்தீஸ்வரன் ஆகியோா் வெள்ளிக்கிழமை பாராட்டி பரிசுகள் வழங்கினா்.

நிகழ்ச்சியில், பள்ளி முதல்வா் ஞா. வியாகுல மேரி, துணை முதல்வா் கென்னடி, பள்ளி அலுவலக மேலாளா் முத்துசாமி மற்றும் ஆசிரியா்கள் ஆகியோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.