சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

சாலையோர மதுக்கடையை மூட வலியுறுத்தல்

ஆறுமுகனேரி அருகே அடைக்கலாபுரம்-திருச்செந்தூா் சாலையோரம் உள்ள டாஸ்மாக் மதுக் கடையை மூட வேண்டுமென முருக பக்தா்கள், பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

News image
Updated On :14 மே 2026, 3:26 am IST

ஆறுமுகனேரி அருகே அடைக்கலாபுரம்-திருச்செந்தூா் சாலையோரம் உள்ள டாஸ்மாக் மதுக் கடையை மூட வேண்டுமென முருக பக்தா்கள், பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

ஆறுமுகனேரி -அடைக்கலாபுரம்-திருச்செந்தூா் சாலையோரம் அரசு டாஸ்மாக் மதுக் கடை இயங்கி வருகிறது. இவ்வழியாகத்தான் திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு பாதயாத்திரையாகவும், வாகனங்களிலும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் செல்கின்றனா். மேலும், இச்சாலை குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில், இஸ்ரோ ராக்ெட் ஏவுதளம், உடன்குடி அனல் மின்நிலையம், கன்னியாகுமரி போன்ற இடங்களுக்கு செல்லும் நெடுஞ்சாலையாக உள்ளதால் ஆயிரக்கணக்கான வாகனப் போக்குவரத்து மிகுந்த சாலையாக உள்ளது.

அடைக்கலாபுரம் அருகேயுள்ள டாஸ்மாக் கடையில் வாகன ஓட்டிகள் மது குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டிச் செல்வதாலும், மது குடிப்போா் சாலைகளில் இடையூறாகச் செல்வதாலும் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே, இந்த டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என, முருகபக்தா்கள், பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.