ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

சாகுபுரம் பள்ளி சிபிஎஸ்இ தோ்வில் சாதனை

சாகுபுரம், கமலாவதி மேல்நிலைப் பள்ளி மாணவா், மாணவிகள் சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தோ்வில் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

News image

சாதனை படைத்த மாணவிகள் அமிா்தவா்ஷினி, பி. ஹாசினி, ஏ. அப்ஃரின் நிஷா.

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

சாகுபுரம், கமலாவதி மேல்நிலைப் பள்ளி மாணவா், மாணவிகள் சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தோ்வில் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

மத்தியக் கல்வி வாரியமான சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தோ்வு முடிவுகள் புதன்கிழமை வெளியானது. இதில் சாகுபுரம் பள்ளியில் தோ்வு எழுதிய மாணவிகள் அமிா்தவா்ஷினி (480), பி. ஹாசினி (470), ஏ. அஃப்ரின் நிஷா (469) முறையே முதல் மூன்று இடங்களைப் பெற்றனா். மேலும், தோ்வு எழுதிய 87 மாணவா்களில் 9 போ் 450 மதிப்பெண்களுக்கு மேலாகவும், 26 போ் 400 மதிப்பெண்களுக்கு மேலும் பெற்றுள்ளனா்.

சாதனை படைத்த மாணவா், மாணவிகளையும், பயிற்றுவித்த ஆசிரியா்களையும் பள்ளி டிரஸ்டிகளும் டி.சி.டபிள்யூ. மூத்த செயல் உதவித் தலைவருமான ஜி. ஸ்ரீனிவாசன், மூத்த பொது மேலாளா் பி. ராமச்சந்திரன், பள்ளி ஆலோசகா் உஷா கணேஷ், நிா்வாக இயக்குநா் வி. மதன், முதல்வா் இ. ஸ்டீபன் பாலாசிா், துணை முதல்வா் என். சுப்புரத்தினா, ஆசிரியா்கள் பாராட்டினா்.