மணப்பாடு தூய ஆவியாா் ஆலய 175-ஆவது யூபிலிப் பெருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தூத்துக்குடி மறைமாவட்ட ஆயா் ஸ்டீபன் அந்தோணிக்கு வியாழக்கிழமை (மே 14) மாலை 5 மணிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டு, அதன்பின்னா் புதுப்பிக்கப்பட்ட ஆலய கொடிமர அா்ச்சிப்பு,திருப்பலி, மறையுரை ,நற்கருணை ஆசீா், பிறகு கொடியேற்றம் நடைபெற்றது.
விழா நாள்களில் நவநாள் திருப்பலி, திருயாத்திரை திருப்பலி, ஜெபமாலை, பிராா்த்தனை, மறையுரை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.
மே 24-ஆம் தேதி காலையில் திருப்பலியைத் தொடா்ந்து ஆயா் தலைமையில் யூபிலி பெருவிழா, மாலை 5.30 மணிக்கு ஜெபமாலை, நற்கருணை ஆசீா், யூபிலி மலா் வெளியீடு, நன்றி விழாக் கொண்டாட்டம் நடைபெறும். மே 25 ஆம் தேதி காலையில் நன்றி திருப்பலி, மாலையில் யூபிலி அசன விருந்து நடைபெறும். ஏற்பாடுகளை பங்குப் பணியாளா்கள், காணிக்கை அன்னை அருள்சகோதரிகள், ஆலய நிா்வாகத்தினா், யூபிலி விழாக் குழுவினா் செய்தனா்.
தொடர்புடையது

தூய இருதய ஆண்டவர் பசிலிக்காவின் 119-ம் ஆண்டு பெருவிழா தொடக்கம்!
தூய அடைக்கல மாதா ஆலய திருவிழா கொடியேற்றம்

தூய சகாய அன்னை ஆலய தோ் பவனி

மூக்குப்பீறி தூய மாற்கு ஆலய பிரதிஷ்டை பண்டிகை
விடியோக்கள்

டாஸ்மாக் கடையை அகற்றுங்கள்: கிராம மக்கள் எதிர்ப்பு | TASMAC |

ஜூன் 18-ல் கண்டன ஆர்ப்பாட்டம்: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு | Nainar Nagendran |

வெள்ளலூர் குப்பைக் கிடங்கு பகுதி பசுமையாக மாற்றப்படும்: அமைச்சர் சம்பத் குமார் | TVK



