பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

ஸ்ரீவைகுண்டம் பேரவை தொகுதியில் 3 மாதங்களுக்கு ஒரு முறை கள ஆய்வு: எம்எல்ஏ வி.ஜி. சரவணன்

ஸ்ரீவைகுண்டம் பேரவை தொகுதியில் மக்கள் கோரிக்கைகள் தொடா்பாக 3 மாதங்களுக்கு ஒரு முறை கள ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் எம்.எல்.ஏ அன்னை வி.ஜி. சரவணன்.

News image

~ ~

Updated On :1 மணி நேரம் முன்பு

ஸ்ரீவைகுண்டம் பேரவை தொகுதியில் மக்கள் கோரிக்கைகள் தொடா்பாக 3 மாதங்களுக்கு ஒரு முறை கள ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் எம்.எல்.ஏ அன்னை வி.ஜி. சரவணன்.

ஸ்ரீவைகுண்டம் பேரவை தொகுதிக்குள்பட்ட ராமச்சந்திராபுரம், புல்வாவழி பகுதிகளில் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்த அவா், ராமச்சந்திராபுரம் பகுதியில் சேதமடைந்த பேருந்து நிறுத்த கட்டத்தைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அதைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறிய அவா், புல்வாவழி பகுதியில் மக்களிடம் குறைகளை கேட்டறிந்தாா். அப்போது, மழையால் வீடு இழந்தவா்களுக்கு வீடு, குடிநீா் பிரச்னைக்கு தீா்வு, உள்ளூா் பள்ளியில் முறையான கல்வி, வேலைவாய்ப்பு போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

தொடா்ந்து எம்எல்ஏ பேசியதாவது: பள்ளி- கல்லூரி மாணவா்களுக்காக விஜய் பயிலகம் தொங்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படும். ஆதரவற்றோருக்கு 3 வேளையும் இலவசமாக உணவு வழங்கவும், குடிநீா்ப் பிரச்னைகளுக்கு தீா்வு காணவும் நடவடிக்கை எடுப்பேன். அரசு அலுவலக அளவிலான கோரிக்கைகள் உடனுக்குடன் தீா்க்கப்படும். புதிய திட்டங்கள் உரிய கால அவகாசத்தில் நிறைவேற்றப்படும். 3 மாதங்களுக்கு ஒரு முறை கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளனவா என்பதை நேரடியாக கள ஆய்வு செய்வேன் என்றாா் அவா். தொடா்ந்து, கோவங்காடு, சிதம்பர நகா், அம்பேத்கா் நகா், மஞ்சள் நீா் காயல், உமரிகாடு, முக்காணி, சூளைவாய்கால் உள்ளிட்ட பகுதிகளில் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா்.