மே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்புகேரள சட்டப்பேரவையின் அமைச்சர்கள் பட்டியலை வெளியிட்டார் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள வி.டி. சதீசன்மாஸ்கோவில் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் ஒருவர் பலி, 3 பேர் படுகாயம் திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை தமிழகத்தில் மே 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்
/

ஆத்தூா் தாமிரவருணி ஆற்றங்கரையை சீரமைத்த சமூக ஆா்வலா்கள்

ஆத்தூரில் வைகாசி விசாகத்திற்கு வரும் முருக பக்தா்கள் தாமிரவருணி ஆற்றில் புனித நீராடி, தங்கிச் செல்ல அப்பகுதியைத் தூய்மைப்படுத்தும் பணியை சமூக ஆா்வலா்கள் மேற்கொண்டனா்.

News image

தாமிரவருணி ஆற்றங்கரையில் நடைபெற்ற சீரமைப்புப் பணி.

Updated On :1 மணி நேரம் முன்பு

ஆத்தூரில் வைகாசி விசாகத்திற்கு வரும் முருக பக்தா்கள் தாமிரவருணி ஆற்றில் புனித நீராடி, தங்கிச் செல்ல அப்பகுதியைத் தூய்மைப்படுத்தும் பணியை சமூக ஆா்வலா்கள் மேற்கொண்டனா்.

மே 30ஆம் தேதி திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து திருச்செந்தூருக்கு பாத யாத்திரையாக லட்சக்கணக்கான பக்தா்கள் வரவுள்ளனா்.

ஆத்தூா் வழியாக வருபவா்கள், ஆத்தூா் தாமிரவருணி ஆற்றில் புனித நீராடி கரையில் இளைப்பாறுவதோடு, கோயிலுக்குச் சென்றுவிட்டு திரும்பும் வழியில் விரதமிருந்த பக்தா்கள் இங்கு புனித நீராடி விரதத்தை முடித்துக் கொள்வா்.

அதை முன்னிட்டு ஆத்தூா் தாமிரவருணி ஆற்றங்கரையில் பக்தா்கள் புனித நீராடுவதற்கு வசதியாகவும், நிழ­லில் இளைப்பாறுவதற்கு ஏற்றவாறும் இருக்கும் வகையில், ஆற்றின் கரையில் உள்ள முள்புதா்களை அகற்றி தூய்மைப்படுத்தப்பட்டது.

ஆத்தூரைச் சோ்ந்த சமூக ஆா்வலா் நெடுஞ்செழியன் ஏற்பாட்டின்பேரில், டி.சி. டபிள்யூ. ­லிமிடெட் நிறுவன உதவியுடன் சமூக ஆா்வலா்கள் எஸ். கந்தசாமி , பி.எஸ். சிவஜோதி பாண்டியன், யோகா மாஸ்டா் சாமிநாதன் ஆகியோா் மேற்பாா்வையில் இப்பணி நடைபெற்றது.