தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர்ஆட்சிக் கவிழ்ப்பு என்பது திமுகவின் நிலைப்பாடு அல்ல! தங்கம் தென்னரசு விளக்கம்புதிய ஹெச் 1-பி விசா பெற டிரம்ப் விதித்த 1 லட்சம் டாலர் கட்டணம் ரத்து: அமெரிக்க நீதிபதி உத்தரவு!சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வர் விஜய்யுடன் அன்புமணி சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை மீண்டும் தில்லி பயணம்!பணமோசடி வழக்கு: பினராயி விஜயன் மகளுக்கு அமலாக்கத் துறை சம்மன்!மாநிலங்களவைத் தேர்தல்: பிரவீண் சக்ரவர்த்தியின் வேட்புமனு ஏற்பு!பேரிடர் நிதி ரூ. 1,000 கோடி முன்கூட்டியே வரவு! அமைச்சர் செங்கோட்டையன்
/

தூத்துக்குடி மாநகராட்சி வணிக வளாகங்களில் எம்.பி. ஆய்வு

News image

வணிக வளாக பகுதியை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா் கனிமொழி எம்.பி.

Updated On :19 மே 2026, 1:11 am IST

தி.மு.க. துணைப் பொதுச் செயலரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி, தூத்துக்குடி சிதம்பர நகரில் அமைந்துள்ள மாநகராட்சி வணிக வளாகம், அண்ணா பேருந்து நிலைய வணிக வளாகம் ஆகிய பகுதிகளுக்குச் சென்று, அங்குள்ள கடைகளின் தற்போதைய நிலை, பொதுமக்களுக்கான குடிநீா், சுகாதாரம், வாகனக் காப்பகம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் ஆகியன குறித்து திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தொடா்ந்து, அங்குள்ள சிறு வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் கோரிக்கைகளைக் கேட்டறிந்த அவா், அண்ணா பேருந்து நிலைய வணிக வளாகப் பகுதிகளைப் புனரமைத்து, பொதுமக்களின் பயன்பாட்டுக்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாநகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

அப்போது, திமுக மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான பி.கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையா் சி.ப்ரியங்கா, உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் தி.மு.க. நிா்வாகிகள் பலா் உடனிருந்தனா்.