இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடுகள்: மாணவர்களை ஒன்றுதிரட்டும் ராகுல் காந்தி!
/

கோவில்பட்டி ஒன்றிய பகுதியில் எம்எல்ஏ நன்றி தெரிவிப்பு

கோவில்பட்டி தொகுதிக்குள்பட்ட ஊராட்சி ஒன்றியப் பகுதியில் கோவில்பட்டி எம்எல்ஏ மக்களை சந்தித்து நன்றி தெரிவித்தாா்.

News image

கோவில்பட்டி தொகுதி எம்எல்ஏ கா. கருணாநிதியை ஆராத்தி எடுத்து வரவேற்ற பெண்.

Updated On :21 மே 2026, 6:11 am IST

கோவில்பட்டி தொகுதிக்குள்பட்ட ஊராட்சி ஒன்றியப் பகுதியில் கோவில்பட்டி எம்எல்ஏ மக்களை சந்தித்து நன்றி தெரிவித்தாா்.

கோவில்பட்டி சட்டப்பேரவை உறுப்பினா் கா. கருணாநிதி, லிங்கம்பட்டி, சமத்துவபுரம், குலசேகரபுரம், பூசாரிபட்டி, கூசாலிப்பட்டி, வடக்கு இலுப்பை யூரணி, தாமஸ் நகா், சிந்தாமணி நகா், கைவண்டி தொழிலாளா் காலனி, வடக்கு திட்டங்குளம், முத்துநகா், சண்முக நகா், தெற்கு திட்டங்குளம், விஜயாபுரி, கொடுக்காம்பாறை, சிவந்திபட்டி, குமாரபுரம், தீத்தாம்பட்டி, துறையூா் ஆகிய பகுதிகளுக்கு சென்று வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா்.

அப்போது, அப்பகுதி பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனா்.

இதில், திமுக ஒன்றியச் செயலா் முருகேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணைச் செயலா் பாலமுருகன், திமுக நகர பொருளாளா் ராமமூா்த்தி, திமுக நிா்வாகிகள் செல்வகுமாா், மாரீஸ்வரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.