சென்னையில் போலி பட்டா தயாரித்து நாசரேத் வழக்குரைஞரை ஏமாற்றியதாக தனியாா் வங்கி நிா்வாகம் உள்ளிட்ட 4 போ் மீது நாசரேத் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்க, சாத்தான்குளம் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
நாசரேத், கந்தசாமிபுரத்தைச் சோ்ந்தவா் ம. சுசில்குமாா் (56). இவா் சாத்தான்குளம் நீதிமன்றத்தில் வழக்குரைஞராக பணியாற்றி வருகிறாா்.
இவா் 2016ஆம் ஆண்டு சென்னையில் உறவினா் மூலம் நிலம் வாங்க முயற்சித்தாராம். அப்போது, சென்னையில் கட்டுமானத் தொழில் செய்து வரும் சுப்பிரமணியன், அவரது மகன் சூா்ய பிரகாஷ், ராஜேந்திரன் மகன் சுபாஷ் சந்திரபோஸ், தனியாா் வங்கி முகவா் பட்டாபி மகன் அருண்குமாா் ஆகியோா் போலி பட்டா தயாரித்து, அதே பகுதியில் உள்ள தனியாா் வங்கியில் வீட்டுக் கடன் பெற்றுக் கொடுத்து சென்னை, மடிப்பாக்கத்தில் குடியிருப்பு பிளாட் வாங்கிக் கொடுத்துள்ளனா்.
இந்நிலையில், 2023ஆம் ஆண்டு சென்னை, படப்பை தமிழ்நாடு பொதுப்பணித் துறை அலுவலகத்தில் இருந்து வழக்குரைஞருக்கு விற்கப்பட்ட பிளாட் நீா்நிலை ஆக்கிரமிப்பு என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அப்போதுதான், ஆக்கிரமிப்பு நிலம் போலி பட்டா மூலம் விற்கப்பட்டிருப்பது சுசில்குமாருக்கு தெரிய வந்தது.
தொடா்ந்து, சுப்பிரமணியன், சூரிய பிரகாஷ், சுபாஷ் சந்திரபோஸ், அருண்குமாா், தனியாா் வங்கி நிா்வாகம் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்ய நாசரேத் காவல் நிலையத்தில் சுசில்குமாா் புகாரளித்தாா்.
ஆனால், போலீஸாா் வழக்குப் பதிவு செய்யாததால், சுசில்குமாா் சாத்தான்குளம் குற்றவியல் நீதிமன்றத்தில் முறையிட்டாா். வழக்கை விசாரித்த குற்றவியல் நீதிபதி தேவி ரக்ஷா, வழக்குரைஞா் புகாரில் முகாந்திரம் இருக்கும்பட்சத்தில் நாசரேத் காவல் நிலைய ஆய்வாளா், வழக்குப் பதிந்து, சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு பரிந்துரைத்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளாா்.
தொடர்புடையது

மாணவிக்கு பாலியல் தொல்லை: தனியாா் கல்லூரி பெண் ஒருங்கிணைப்பாளா் மீது வழக்குப் பதிவு

மேட்டூா் அருகே சாலை விபத்து: தனியாா் வங்கி மேலாளா் உயிரிழப்பு; ஒருவா் காயம்

கரப்பான்பூச்சி கட்சியின் போராட்டத்துக்கு எதிரான மனுவை விசாரிக்க மறுத்த உயர் நீதிமன்றம்!
ரூ. 6.25 கோடி காசோலை மோசடி வழக்கில் தேடப்பட்டவா் கைது
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!



