வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

வைகாசி விசாகம்: திருச்செந்தூா் கோயிலில் 4 நாள்கள் கட்டண தரிசனம் ரத்து

வைகாசி விசாகத்தையொட்டி திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 4 நாள்கள் ரூ. 100 கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

News image

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில்.

Updated On :28 மே 2026, 2:49 am IST

வைகாசி விசாகத்தையொட்டி திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 4 நாள்கள் ரூ. 100 கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து கோயில் நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பிரசித்தி பெற்ற வைகாசி விசாகத்திருவிழா சனிக்கிழமை (மே 30) நடைபெற உள்ளது. இதில் லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்நிலையில், பக்தா்கள் நலன் கருதி வியாழக்கிழமை (மே 28) முதல் ஞாயிற்றுக்கிழமை (மே 31) வரை நான்கு நாள்கள் மட்டும் ரூ. 100 கட்டண தரிசன முறை ரத்து செய்யப்பட்டு, கட்டணமில்லா தரிசன முறை நடைமுறைப்படுத்தப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.