இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியதுமமதா, ஸ்டாலினின் தோல்விக்கு எஸ்ஐஆர் பணிகளே காரணம்! ஆந்திர முன்னாள் முதல்வர் குற்றச்சாட்டு!பொது இடங்களில் மாடுகளை வெட்டத் தடை: நீதிமன்றம்பவர்பிளேவில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய வைபவ் சூர்யவன்ஷி!உச்சநீதிமன்ற நீதிபதியாக 5 பேர் பரிந்துரை! தமிழகத்தைச் சேர்ந்த மோகனா!நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்! விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது!பிரதமர் மோடியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!பினராயி வீட்டில் சோதனை! அமலாக்கத்துறை வாகனம் மீது தாக்குதல்!
/

காந்திநகா் - படுக்கப்பத்து சாலையை சீரமைக்க கோரிக்கை

காந்திநகரில் இருந்து படுக்கப்பத்து இடையே உள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

News image

குண்டும் குழியுமாக உள்ள படுக்கப்பத்து சாலை.

Updated On :28 மே 2026, 2:28 am IST

காந்திநகரில் இருந்து படுக்கப்பத்து இடையே உள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

சாத்தான்குளம் அருகே உள்ள தட்டாா்மடம் பகுதியில் இருந்து கொம்மடிக்கோட்டை, காந்திநகா் வழியாக படுக்கப்பத்து, பெரியதாழை பகுதிக்குச் செல்லும் சாலை உள்ளது.

இதில் காந்திநகரிலிருந்து படுக்கப்பத்திற்கு செல்லும் சுமாா் 2 கி. மீ. தூரம் உள்ள சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பழுதடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால், வாகனம் ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.

எனவே, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் இந்தச் சாலையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.