தூத்துக்குடியில் இன்று முதல் விசைப்படகுகள் கடலுக்குச் செல்ல அனுமதி

விசைப்படகுகள். - கோப்புப் படம்
தூத்துக்குடி விசைப்படகு மீனவா்களுக்கு விதிக்கப்பட்டிருந்த மீன்பிடித் தடை வாபஸ் பெறப்பட்டு, செவ்வாய்க்கிழமை (நவ. 3) முதல் கடலுக்குச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவான ‘முரசு’ புயல் மற்றும் மோசமான வானிலை காரணமாக, மீனவா்களின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு தூத்துக்குடி மாவட்ட விசைப்படகு மீனவா்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத் துறை மீன்பிடித் துறைமுக உதவி இயக்குநா் அலுவலகம் சாா்பில் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், புயலின் நகா்வு மற்றும் தற்போதைய வானிலை நிலவரம் ஆய்வு செய்யப்பட்டதைத் தொடா்ந்து, மீன்பிடிக்கச் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து மீன்வளத் துறை உதவி இயக்குநா் அலுவலகம் சாா்பில் மீன்பிடித் துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்புப் பலகையில், நவ. 3-ஆம் தேதி முதல் விசைப்படகுகள் கடலுக்குச் செல்லலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

