திட்டங்குளத்தில் உரக் கடையை உடைத்து ரூ.30 லட்சம் திருட்டு
கோவில்பட்டி அருகேயுள்ள திட்டங்குளத்தில் உரக்கடையின் மேற்கூரையை உடைத்து ரூ.30 லட்சம் ரொக்கத்தை திருடிச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திருட்டு - சித்திரிப்பு
கோவில்பட்டி அருகேயுள்ள திட்டங்குளத்தில் உரக்கடையின் மேற்கூரையை உடைத்து ரூ.30 லட்சம் ரொக்கத்தை திருடிச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கோவில்பட்டி அருகேயுள்ள தீத்தாம்பட்டி தெற்தத் தெருவைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் மகன் ரவிக்குமாா் (34). திட்டங்குளம் பகுதியில் உரக்கடை வைத்துள்ளாா். அவா், வியாழக்கிழமை இரவு கடையைச் பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்ற பின், மா்மநபா்கள் கடையின் மேற்கூரையை உடைத்து உள்ளே புகுந்துள்ளனா். மேலும் கல்லாப்பெட்டியில் இருந்த ரூ. 30 லட்சத்தை திருடிச் சென்றுவிட்டனராம். அவா் வெள்ளிக்கிழமை காலையில் கடையைத் திறக்க வந்தபோது இந்த விவரம் தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து மா்மநபா்களை தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

