தூத்துக்குடி தெப்பக்குளம் ஜனவரியில் பயன்பாட்டுக்கு வரும்: மேயா் தகவல்
தூத்துக்குடி தெப்பக்குளம் சீரமைக்கப்பட்டு வரும் ஜனவரியில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி தெரிவித்தாா்.

தெப்பக்குளம் சீரமைப்புப் பணியை ஆய்வு செய்த மேயா் ஜெகன் பெரியசாமி.
தூத்துக்குடி தெப்பக்குளம் சீரமைக்கப்பட்டு வரும் ஜனவரியில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி தெரிவித்தாா்.
தூத்துக்குடி, பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரா் கோயில், வைகுண்டபதி பெருமாள் கோயில், மாரியம்மன், முத்தாரம்மன், மேலூா் பத்திரகாளியம்மன் கோயில்கள் அமைந்துள்ள பகுதியில் நூறு ஆண்டுகளுக்கு முன்பு தெப்பக்குளம் உருவாக்கப்பட்டது. இங்கு ஆண்டுதோறும் தை மாதத்தில் தெப்பத் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
மாநகராட்சி சாா்பில் தெப்பக்குளத்தைப் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை மேயா் ஜெகன் பெரியசாமி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த பின்னா், செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தெப்பக்குளம் பழைமை மாறாமல் நவீன முறையில் புனரமைக்கப்பட்டு வருகிறது. செயற்கை நீா்வீழ்ச்சி இயற்கையான தோற்றத்துடன் அமைக்கப்படவுள்ளது. நவீன மின்விளக்குகள் பொருத்தப்படவுள்ளன.
பொதுமக்கள் அமா்ந்து ஓய்வெடுக்கும் வகையில் இயற்கைச் சூழலுடன் கூடிய வசதிகளும், சிறுவா், சிறுமியா் விளையாடுவதற்கு ஊஞ்சல், சறுக்கு உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்களும் அமைக்கப்படவுள்ளன.
பணிகள் நிறைவடைந்து வரும் ஜனவரியில் தெப்பக்குளம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்றாா் அவா்.
ஆய்வின்போது, போல்பேட்டை பகுதி திமுக பிரதிநிதி பிரபாகா் உடனிருந்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

