சாத்தான்குளத்தில் மழைக்கு சேதமான சாலையை சீரமைக்கக் கோரிக்கை
சாத்தான்குளத்தில் மழைக்கு சேதமான சாலையை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சாத்தான்குளத்தில் மழைக்கு சேதமான சாலையை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
வடகிழக்குப் பருவமழை பெய்தபோது, சாத்தான்குளம் பகுதிகளில் தேங்கிய மழைநீரால் அரிப்பு ஏற்பட்டு சாலை சேதமானது. குறிப்பாக, தச்சமொழி முதலூா் சாலை வளைவு பகுதியில் சாலை குண்டும் , குழியுமாக காணப்படுகிறது. இதேபோல், புலமாடன் செட்டியாா் தேசிய மேல்நிலைப் பள்ளி முன் உள்ள வேகத்தடை அருகே பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த சாலைகளின் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனா்.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

