தனி மனிதத் துதிபாடல்களை தவிர்க்கவும்... திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் அறிக்கை சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா ஜனவரி 16-ம் தேதி தொடக்கம்! திருப்பதி ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்க ஆபரணங்களை வழங்கும் பக்தர்! நீலகிரி, கொடைக்கானலில் 2 நாள்களுக்கு உறைபனி! வானிலை எச்சரிக்கை! அக்வான் புயல்: ராஞ்சியில் 20 விமானங்கள் ரத்து! அமெரிக்காவின் அதிநவீன ட்ரோனை சுட்டு வீழ்த்திய ஈரான்! தவெக ஆட்சி தானாக கவிழ்ந்துவிடும் - எடப்பாடி பழனிசாமி தவெக ஆட்சியில் உயிருக்கும் பயிருக்கும் பாதுகாப்பு இல்லை! டி.ஆர்.பி. ராஜா

கந்த சஷ்டி விழா: திருச்செந்தூர் கோயிலில் மஞ்சள் நீராட்டு!

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழாவின் நிறைவு நாளான மஞ்சள் நீராட்டு நடைபெற்று சுவாமி குமரவிடங்கப்பெருமான், தெய்வானை அம்மன் தனித்தனி பல்லக்கில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழாவின் நிறைவு நாளான சனிக்கிழமை தனித்தனி பல்லக்கில் எழுந்தருளி வீதியுலா வந்த சுவாமி குமரவிடங்கப்பெருமான், தெய்வானை அம்மன்.

Updated On :

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழாவின் நிறைவு நாளான சனிக்கிழமை மஞ்சள் நீராட்டு நடைபெற்று சுவாமி குமரவிடங்கப்பெருமான், தெய்வானை அம்மன் தனித்தனி பல்லக்கில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

இக்கோயிலில் பிரசித்திப்பெற்ற கந்த சஷ்டி திருவிழா கடந்த10ஆம் தேதி தொடங்கியது. சிகர நிகழ்வாக சூரசம்ஹாரம் 15இல் நடைபெற்றது. 16இல் திருக்கல்யாணம், 17இல் சுவாமி, அம்மன் பட்டினப் பிரவேசம், 18, 19, 20 ஆகிய தேதிகளில் ஊஞ்சல் உற்சவம் ஆகியவை நடைபெற்றன.

Story image

நிறைவாக சனிக்கிழமை கோயில் அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம், தொடா்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றன. மாலையில் மஞ்சள் நீராட்டு வைபவம் நடைபெற்றது.

அதைத் தொடா்ந்து, சுவாமி குமரவிடங்கப்பெருமான், தெய்வானை அம்மன் தனித்தனி பல்லக்கில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். பின்னா், சுவாமி-அம்மன் கோயில் சோ்ந்ததும் திருவிழா நிறைவு பெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.