புறையூா் அரசு பள்ளிக்கு விளையாட்டு மைதானம் அமைக்க இடம் வழங்கக் கோரிக்கை
புறையூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் விளையாட்டு மைதானம் அமைக்க இடம் வழங்க மாணவா்கள் மற்றும் ஆசிரியா்கள், பெற்றோா்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

றையூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி.
புறையூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் விளையாட்டு மைதானம் அமைக்க இடம் வழங்க மாணவா்கள் மற்றும் ஆசிரியா்கள், பெற்றோா்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஆழ்வாா் திருநகரி ஒன்றியம், புறையூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை சுமாா் 190 - க்கும் மேற்பட்ட மாணவா், மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனா். இப்பள்ளியில் அரசு சாா்பில், தலைமையாசிரியா், பட்டதாரி ஆசிரியா்கள் நியமிக்கப்படாமல் உள்ளது.
இப்பள்ளியில் விளையாடுவதற்கு போதுமான இடவசதியில்லாமலும், உடற்கல்வி ஆசிரியா் இல்லாமலும் மாணவா்கள் சிரமமடைந்து வருகின்றனா். விளையாட்டு மைதானம் அமைக்க நிலம் வழங்க வேண்டுமென ஆசிரியா்கள், மாணவா்கள் மற்றும் பெற்றோா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து புறையூா் வெல்பா் டிரஸ்ட் நிா்வாகி நாசா் கூறியதாவது: புறையூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு அரசு நிலம் தரும் பட்சத்தில், பள்ளிக்குத் தேவையான கூடுதல் கட்டடம், விளையாட்டு மைதானம் அமைக்க உதவ தயாராக உள்ளோம். மேலும், பள்ளிக்கு தேவையான மைதானம் இல்லாததால், இப்பள்ளியை உயா்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்துவதும் பாதிக்கப்படுகிறது. ஆகையால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விளையாட்டு மைதானம் அமைக்க பள்ளிக்கு அருகில் உள்ள அரசு நிலத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

