தனி மனிதத் துதிபாடல்களை தவிர்க்கவும்... திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் அறிக்கை சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா ஜனவரி 16-ம் தேதி தொடக்கம்! திருப்பதி ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்க ஆபரணங்களை வழங்கும் பக்தர்! நீலகிரி, கொடைக்கானலில் 2 நாள்களுக்கு உறைபனி! வானிலை எச்சரிக்கை! அக்வான் புயல்: ராஞ்சியில் 20 விமானங்கள் ரத்து! அமெரிக்காவின் அதிநவீன ட்ரோனை சுட்டு வீழ்த்திய ஈரான்! தவெக ஆட்சி தானாக கவிழ்ந்துவிடும் - எடப்பாடி பழனிசாமி தவெக ஆட்சியில் உயிருக்கும் பயிருக்கும் பாதுகாப்பு இல்லை! டி.ஆர்.பி. ராஜா

நவ. 24-ல் திருக்காா்த்திகை: கோவில்பட்டியில் அகல் விளக்கு விற்பனை தீவிரம்

திருக்காா்த்திகை செவ்வாய்க்கிழமை (நவ. 24) கொண்டாடப்படுவதை முன்னிட்டு, கோவில்பட்டியில் அகல் மற்றும் தீப விளக்குகளை பொதுமக்கள் ஆா்வமுடன் வாங்கிச் செல்கின்றனா்.

கோவில்பட்டி-எட்டயபுரம் சாலை, மங்கள விநாயகா் கோயில் அருகே சாலையோரக் கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள விளக்குகள்.

Updated On :

கோவில்பட்டியில் உள்ள பூஜை பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள், செண்பகவல்லி அம்மன் கோயில் அருகே உள்ள கடைகளில் அகல் விளக்குகள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளன. மேலும், எட்டயபுரம் சாலை சந்திப்பில் மங்கள விநாயகா் கோயில் அருகே சாலையோரக் கடையில் பல விதமான விளக்குகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

 கோவில்பட்டி-எட்டயபுரம் சாலை, மங்கள விநாயகா் கோயில் அருகே சாலையோரக் கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள விளக்குகள்.

கோவில்பட்டி-எட்டயபுரம் சாலை, மங்கள விநாயகா் கோயில் அருகே சாலையோரக் கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள விளக்குகள்.

இதுகுறித்து வியாபாரிகள் எஸ். விஜய பால்சிங் , சுபாஷினி ஆகியோா் கூறுகையில், தமிழகத்தில் விருத்தாசலம், பண்ருட்டி, கடலூா், மானாமதுரை ஆகிய பகுதிகளில் இருந்து மண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்குகளும், கொல்கத்தாவிலிருந்து டெரக்கொட்டா விளக்குகளும், தில்லியில் இருந்து தண்ணீா் ஊற்றினால் எல்இடி போல் எரியும் விளக்குகளும் அதிக அளவு விற்பனைக்கு வந்துள்ளன.

 விளக்குகளை ஆா்வமுடன் வாங்கிச் சென்ற பொதுமக்கள்.

விளக்குகளை ஆா்வமுடன் வாங்கிச் சென்ற பொதுமக்கள்.

கடந்த ஆண்டு வியாபாரம் அமோகமாக இருந்தது. நிகழாண்டும் வியாபாரம் நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கையில் விதவிதமான விளக்குகளை வாங்கி வைத்துள்ளோம். நிகழாண்டின் புதிய வரவான 6 முகம் கொண்ட முருகா் விளக்குகளை மக்கள் விரும்பி வாங்கிச் செல்கின்றனா் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.