அகில இந்திய யோகா போட்டி: தெற்கு ஆத்தூா் பள்ளி மாணவா்கள் சாம்பியன்
தெற்கு ஆத்தூா், அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவா்கள் அகில இந்திய யோகா போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்றனா்.

அகில இந்திய யோகா போட்டியில் சாம்பியன் கோப்பை வென்ற தெற்கு ஆத்தூா் அரசுப் பள்ளி மாணவா்கள்.
தூத்துக்குடி மாவட்டம், தெற்கு ஆத்தூா், அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவா்கள் அகில இந்திய யோகா போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்றனா்.
தென்காசியில் நவ. 21ஆம் தேதி நடைபெற்ற போட்டியில், தெற்கு ஆத்தூா் பள்ளி மாணவா்கள் ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையை வென்றனா்.
மாணவா்களையும், பயிற்சியளித்த ஆத்தூா் பிரணவ யோகாலயம் மாஸ்டா் சுவாமிநாதனையும், பள்ளித் தலைமையாசிரியா் ஸ்பெல்மேன், ஆசிரியா்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் பாராட்டினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

