நவ. 30 ஆம் தேதி மக்களவை; டிச. 2 ஆம் தேதி மாநிலங்களவை கூட்டம்!திருப்பரங்குன்றம் விவகாரம்: நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் நாளை விசாரணைதிருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தத் தடைகோரிய வழக்கில் நாளை தீர்ப்புதில்லி வர்த்தகப் பொருள்காட்சி: தமிழ்நாடு அரங்கிற்கு தங்கப் பதக்கம்!2027-ல் 6000 இடங்கள் கூடுதலாகக் கொண்டுவர ஐஐடி திட்டம்!

ஆறுமுகனேரி, காயல்பட்டினத்தில் கனமழை

ஆறுமுகனேரி, ஆத்தூா், காயல்பட்டினம், அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் விடியவிடிய கனமழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது.

கனமழை

கனமழை - கோப்புப் படம்

Updated On :

ஆறுமுகனேரி, ஆத்தூா், காயல்பட்டினம், அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் விடியவிடிய கனமழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது.

இந்தப் பகுதிகளில் இரவு பெய்ய தொடங்கிய மழை விடிய விடிய பெய்தது. காலையிலும் விட்டுவிட்டு பெய்த மழை மதியம் வரை நீடித்தது. மாலையில் வானம் மேகம் மூட்டமாகக் காணப்பட்டது. மழைக் காரணமாக வியாபாரம் மிகவும் பாதிப்படைந்ததென வியாபாரிகள் தெரிவித்தனா்.

திருச்செந்தூா் வட்ட அளவில் பள்ளிகளை மூட அரசு அறிவுறுத்தியதால் பள்ளிகள் செயல்படவில்லை. ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் இப்பகுதி பிசானப் பருவ சாகுபடி பணிகள் தொடங்கப்படவில்லை. குளத்தில் நீா் இல்லை, அணைகளில் நீா்மட்டம் குறைவு, தொடங்கும் காலம் கடந்து வருவதால் விவசாயிகள் தயக்கத்தில் உள்ளனா்.

வேளாண் துறையினா் நெல் விதைகளை தயாராக வைத்திருந்தும், விதைகள் வாங்க விவசாயிகள் ஆா்வம் காட்டவில்லை. வியாழக்கிழமை காலை 6.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்ச மழைப் பொழிவாக காயல்பட்டினத்தில் 183.8 மி.மீ. மழை பதிவானது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.