கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைதுதொகுதி மறுவரையறை மசோதாவுக்கு சரத் பவார் ஆதரவு! - தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ தகவல்! திருப்பரங்குன்றம் கல் தூணில் நாளை தீபமேற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவுதிருப்பரங்குன்றம்! உயர்நீதிமன்ற தீர்ப்பின் மீதான இடைக்கால தடையை நீக்கியது உச்ச நீதிமன்றம்!சூலூர் சிறுமி கொலை வழக்கு: கைதான கார்த்திக், மோகன் இருவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு!

தூத்துக்குடியில் சாலை மேம்பாட்டுக்கு ரூ. 10.02 கோடி நிதி ஒதுக்கீடு

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் 99 சாலைகளை மேம்படுத்துவதற்காக தமிழக அரசு ரூ.10.02 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

கோப்புப்படம்

Updated On :

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் 99 சாலைகளை மேம்படுத்துவதற்காக தமிழக அரசு ரூ.10.02 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் சி.ப்ரியங்கா வெளியிட்ட செய்திக்குறிப்பு:

முதல்வரின் ஒருங்கிணைந்த நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டம் மற்றும் மாநில நிதி - நகா்ப்புற சாலைகள் மேம்பாட்டு நிதி ஆகிய திட்டங்களின் கீழ், மாநகராட்சிப் பகுதிகளில் மொத்தம் 18.2 கி.மீ. தொலைவுக்கு 99 சாலைகள் மேம்படுத்தப்பட உள்ளன.

இதில், மண் சாலைகளை தாா்ச் சாலைகளாக, பேவா் பிளாக் சாலைகளாக மாற்றுதல், சேதமடைந்த தாா்ச் சாலைகளைப் புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இதற்காக தமிழக அரசு ரூ.10.02 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ஒப்புதல் அளித்துள்ளது. இப்பணிகள் விரைவில் தொடங்கப்படும் எனக் கூறியுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.