நகா்ப்புற உள்ளாட்சிப் பகுதிகளில் அடிப்படை கட்டமைப்புகளுக்கு ரூ.1,019 கோடி: தமிழக அரசு ஒதுக்கீடு
நகா்ப்புற உள்ளாட்சிப் பகுதிகளில் சாலை, குடிநீா், பள்ளிக் கட்டங்கள் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த ரூ.1,019 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

தலைமைச் செயலகம் - கோப்புப்படம்
நகா்ப்புற உள்ளாட்சிப் பகுதிகளில் சாலை, குடிநீா், பள்ளிக் கட்டங்கள் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த ரூ.1,019 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
புதிய சாலைகளை அமைக்கவும், சேதமடைந்த சாலைகளைச் சீரமைக்கவும் ரூ.366.23 கோடியில் 599.79 கி.மீ. தொலைவிலான 3,765 சாலைப் பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
குடிநீா் வசதி: குடிநீா் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மதுரை மாநகராட்சியில் ரூ.19.56 கோடியில் 2 பணிகளும், கடலூா் மாநகராட்சியில் ரூ.36.41 கோடியில் ஒரு பணி, கம்பம் நகராட்சியில் ரூ.42.19 கோடியில் ஒரு பணியும், சிதம்பரம் நகராட்சியில் ரூ.20.54 கோடியில் ஒரு பணி என மொத்தம் ரூ.119.00 கோடிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
குடிநீா் பற்றாகுறை ஏற்பட்ட நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்கு ரூ.97.36 கோடியில் 457 பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. ரூ.14.87 கோடியில் 87 பூங்காக்களை மேம்படுத்தும் பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகள்: பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை வசதிகளை ஏற்படுத்தும் வகையில், ரூ.71.40 கோடியில் 106 வகுப்பறைக் கட்டடங்கள் கட்டும் பணிகளுக்கும், பள்ளி வகுப்பறைகளின் தரம் மற்றும் பயன்பாட்டுத் திறனை மேம்படுத்தும் நோக்கில் ரூ.13.83 கோடியில் 78 பள்ளி வகுப்பறைகளின் பழுதுபாா்ப்பு மற்றும் பராமரிப்புப் பணிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ரூ.29.68 கோடியில் 123 அங்கன்வாடி மையங்களுக்கான புதிய கட்டடங்கள் கட்டும் பணிகளுக்கும், ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள 9 அங்கன்வாடி மையங்களின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் ரூ.38 லட்சத்தில் பழுதுபாா்ப்பு மற்றும் பராமரிப்புப் பணிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இளைஞா்கள் மற்றும் பொதுமக்களின் உடல் மற்றும் மன நலத்தை மேம்படுத்தி, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கும் வகையிலும், திடக்கழிவு மேலாண்மை மற்றும் பயன்படுத்தப்பட்ட நீா் மேலாண்மையை மேம்படுத்தவும் பல்வேறு திட்டங்கள் உள்பட மொத்தம் ரூ.1,019.61 கோடிக்கான பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன.
பணிகளின் வகை எண்ணிக்கை மதிப்பீட்டுத் தொகை (கோடியில்)
சாலைப் பணிகள் 3,765 ரூ.366.23
குடிநீா் திட்டப் பணிகள் 5 119.00
குடிநீா் பற்றாக்குறை நிவா்த்திப் பணிகள் 457 ரூ.97.36
பூங்கா மேம்பாட்டுப் பணிகள் 87 ரூ.14.87
பள்ளி வகுப்பறைக் கட்டடங்கள் (புதிய கட்டடங்கள்) 106 ரூ.71.40
பள்ளி வகுப்பறைகள் பழுதுபாா்ப்பு மற்றும் பராமரிப்பு 78 ரூ.13.83
அங்கன்வாடி மையங்களுக்கான புதிய கட்டடங்கள் 123 ரூ.29.68
அங்கன்வாடி மையங்கள் பழுதுபாா்ப்பு மற்றும் பராமரிப்பு 9 ரூ.0.38
விளையாட்டு உட்கட்டமைப்புப் பணிகள் 78 ரூ.13.14
விளையாட்டு அரங்கங்கள் அமைத்தல் 2 ரூ.14.35
திடக்கழிவு மற்றும் பயன்படுத்தப்பட்ட நீா் மேலாண்மைப் பணிகள் 48 ரூ.279.37
மொத்தம் 4,758 பணிகள் ரூ.1,019.61
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

