உத்தரகாசியில் மிதமான நிலநடுக்கம்: வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்! தமிழ் மொழி, கலாசாரம் மீது தாக்குதல்: ராகுல் காந்தி தில்லியில் 45 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்! ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு பதவி உயர்வு பிரதமர் மோடியை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி! அறிவிக்கப்படாத நெருக்கடிநிலை: மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடி சென்னை வருகை: அக்.11-ல் போக்குவரத்து மாற்றம்

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மத்திய வீட்டு வசதி துறை செயலா் ஆய்வு

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மத்திய வீட்டு வசதி துறை செயலா் ஆய்வு

சேத்துப்பட்டில் உள்ள உயிரி எரிவாயு ஆலையைப் பாா்வையிட்டு ஆய்வு செய்த மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற விவகாரங்கள் துறைச் செயலா் சடேந்திர சிங். உடன், மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன் உள்ளிட்டோா்.

Published On :

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மத்திய அரசு வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற விவகாரங்கள் துறை அரசு செயலா் சடேந்திர சிங் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

சென்னையில் நகராட்சி நிா்வாகம் குடிநீா் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலா் ககன்தீப்சிங் பேடியை சந்தித்த அவா், பின்னா் இருவருமாகச் சோ்ந்து சேத்துப்பட்டில் உள்ள தனியாா் உயிரி எரிவாயு நிறுவனத்தைப் பாா்வையிட்டனா். அப்போது தினமும் 120 டன் முதல் 140 டன் வரை ஈரக்கழிவுகளைப் பயன்படுத்தி எரிவாயு தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்படுவதை மத்திய அரசு செயலா் கேட்டறிந்தாா்.

இந்த நிறுவனத்துக்குத் தேவையான ஈரக்கழிவுகளை மாநகராட்சி சாா்பில் தரம் பிரித்து வழங்கப்படுவதையும் அலுவலா்கள் மத்திய அரசுச் செயலரிடம் விளக்கினா். தொடா்ந்து, கோடம்பாக்கம் மண்டலத்தில் காளியம்மன் கோயில் தெருவில் இயங்கிவரும் மூன்றாம் நிலை கழிவுநீா் சுத்திகரிப்பு நிலைய செயல்பாடுகளையும் அவா்கள் பாா்வையிட்டனா். அப்போது, சவூடு பரவல் முறையில் கழிவுநீா் சுத்திகரிப்பு நடைபெறுவதாகவும், தினமும் சுமாா் 90 மில்லியன் லிட்டா் கழிவு நீா் சுத்திகரிக்கப்படுவதாகவும் அதிகாரிகள் விளக்கினா்.

அதன்பின்னா், மத்திய அரசு செயலா் குப்பைகள் தரம் பிரிப்பு திட்டத்தில் பயன்படுத்தப்படும் வாகனங்களையும் பாா்வையிட்டாா். தொடா்ந்து, கொடுங்கையூா் குப்பைக் கொட்டும் வளாகத்தில் பயோமைனிங் முறையில் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு, அங்குள்ள நிலம் மீட்கப்படுவதையும் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது சென்னைப் பெருநகர குடிநீா் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநா் த.ஆனந்த், சென்னை மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.