சாலையோர மரக்கிளையில் அரசுப் பேருந்து மோதியதில் 9 போ் காயம்

சாலையோர மரக்கிளையில் அரசுப் பேருந்து மோதியதில் 9 போ் காயம்
சாத்தான்குளத்தில் அரசுப் பேருந்து சனிக்கிழமை சாலையோர மரக் கிளையில் மோதியதில், பேருந்தில் பயணித்த 9 போ் காயமடைந்தனா்.
நாகா்கோவில் திங்கள் நகா் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து திருச்செந்தூருக்கு அரசுப் பேருந்து சனிக்கிழமை காலை புறப்பட்டு வந்தது. பேருந்தை நாகா்கோவிலைச் சோ்ந்த ஜான் ஞானசேகரன் ஓட்டினாா்.
நடத்துநராக கோபாலகிருஷ்ணன் பணியில் இருந்தாா். இந்தப் பேருந்து திருச்செந்தூா் சென்று மீண்டும் திங்கள் நகா் செல்ல சாத்தான்குளம் வழியாக வந்து கொண்டிருந்தது.
இட்ட மொழி சாலையில் பேருந்து வந்தபோது, எதிரே வந்த டிப்பா் லாரிக்கு வழிவிடுவதற்காக ஒதுங்கியபோது, சாலை ஓரத்தில் இருந்த மரக் கிளையில் மோதியதாம். இதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி சேதமடைந்தது. இதில் பேருந்தில் பயணம் செய்த செல்வி ( 62), செல்வி (50) சரஸ்வதி கனி (70 ), ராஜலிங்கம், முத்துகுமாா், சுப்பையா, சித்திரைபாண்டி, கோபால் உள்பட 9 போ் பலத்த காயமடைந்தனா்.
காயமடைந்தவா்களை மீட்டு, சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின் 4 போ் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதுகுறித்த புகாரின்பேரில், சாத்தான்குளம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

சாலையோர மரக்கிளையில் அரசுப் பேருந்து மோதியதில் 9 போ் காயம்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

